குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: திருத்தணியில் வட மாநில வாலிபர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு தமிழக அரசு ஊக்கம் அளிப்பதால் தான் இப்படி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர் சுராஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், திருத்தணியில் நேற்று மற்றொரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜமால் என்ற உள்ளூர் தொழிலதிபர், எந்தவித காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இது ஒரு கவலைக்குரிய போக்காக மாறியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது.
@twitter@https://x.com/annamalai_k/status/2006240021721014482?s=20twitter
சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் கீழ், பொதுப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தனது முழுமையான தோல்வியை திமுக ஒப்புக்கொள்வதற்கு முன்பு, இன்னும் எத்தனை பேர்பாதிக்கப்பட வேண்டும்? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
ஊக்கத்தொகை கொடுக்காமல் இருந்தால் சரி.
திருட்டு திமுக டாஸ்மாக் மாடல் அரசு ஒரு நாடக கும்பல்...மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து கொள்ளை அடிப்பது மட்டுமே தொழில்... முதல்வரின் கையாலாகாத தனம் வெளிபடையாக தெரிகிறது
குற்றவாளிகள் ஊக்க மருந்து அரசியல் நிழல் போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள்
எதோ கையில் ஏதோ கிடைத்தால் என்ன செய்யுமோ அப்படிதான் தற்சமயம் நிலைமையும் இருக்கிறது. இன்னுமொரு 3/12 மாதங்கள் பொறுமையாக இருக்கவேண்டும்.
அரசில் குற்றவாளிகள் அமைச்சராக இருக்கும்போது அவருடைய அடிவருடிகளை கேடகவா வேண்டும். போலீஸ் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுகிறது சாதரான மனிதர்கள் கதி அதோகதிதான்
ஸ்டாலின் தோற்று போனால் தமிழ் நாட்டிற்கு நல்லது.......... தமிழ் நாட்டை அழித்து விட்டது இந்த திராவிட மாடல் ஆட்சி.
திமுக ஒரு ரவுடிகள் கட்சி. ஸ்டாலினுக்கோ ஆட்சி செய்ய கொஞ்சம்கூட தெரியவில்லை.
ஜனப்பெருக்கம் கூட கூட குற்றங்களும் கூடுவது தவிர்க்கஇயலாது. கையூட்டலும் வன்மையும் கூடுதலாய் இருக்கும். இதனை கட்டுப்படுத்த வருவாய் துறை வணிகத்துறை காவல் பொதுப்பணி துறைகளில் நேர்மையான நபர்கள் தேவை. இந்த துறைகளில் வகுப்புவாரி நியமனங்கள் தவிர்த்தல் அவசியம். நேர்மையான 100% தாழ்த்தப்பட்டவர் இருந்தாலும் தவறு இல்லை. மாணவர்கள் இடையே மாரல் வகுப்பு அவசியம் இதில் தேர்ச்சி பெற்றால்தான் அடுத்த மேல் வகுப்புக்கு செல்லமுடியும் என்பதும் அவசியம்
வந்துட்டார் உத்தமர்
என்ன உடன் பிறப்பே உலக 1.76 லட்சம் கோடி ஊழல் புகழ் திருட்டு திராவிட கோவால் புற கொள்ளையன் சொன்னால் கேட்கும் நீ இந்த உத்தமர் சொல்வதையும் தான் ...
குற்றவாளிகளால் குற்றவாளிகளுடன் குற்றவாளிகளுக்காக தமிழ் நாட்டில் இயங்கும் ஒரே கட்சி
அதுதான் திராவிட மாடல் .......
நீங்க உபி, குஜராத் பக்கம் போய் பாருங்க குற்றவாளிகளை ஜெயிலில் இருந்து தண்டனைக்கு முன்பே விடுவித்து தாரைதப்பட்டை அடித்து வரவேற்று, சிலருக்கு அமைச்சர் பதவியே கொடுக்கிறாங்க, அதையும் சேர்த்து சொல்லலாம் அல்லே.
தமிழ்நாட்டைப்பற்றி பேசு, நீ என்ன.. உ பி லையா இருக்க... மடை மாற்றாதே..
சமீபமாக ஆஸியில் இந்தியர்களை மர்ம நபர்கள் சுட்டு விட்டு ஓடிறாய்ங்கலாம் பாத்து சூதானமா இருங்க...
தண்டிக்கப்பட்ட கொலையாளி பேரறிவாளனுக்கு விடுதலையும், விருந்தும் அளித்து மகிழ்ந்த பெருமை நமது முதல்வருக்கு மட்டுமே உண்டு.
உபி, குஜராத் பக்கம் போய் பாருங்க... அப்புறம் என்ன .... முன்னோடி மாநிலம்?? முன்னுதாரண மாநிலம் ????மேலும்
-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்
-
உபி உடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது: பிரவீன் சக்கரவர்த்திக்கு சிதம்பரம் எதிர்ப்பு
-
ராஜஸ்தானில் பயங்கர சதி முறியடிப்பு; காரில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்
-
உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு: மக்கள் கொண்டாட்டம்
-
குடியரசு தின விழாவில் முதல் முறை; விலங்கின அணிவகுப்பு ஏற்பாடு
-
ராமர் கோவில் பிரதிஷ்டை 2ம் ஆண்டு விழா: பிரதமர் மோடி பெருமிதம்