தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சம் கீழே சென்றது; ஒரே நாளில் ரூ.960 குறைந்தது
சென்னை: சென்னையில் இன்று (டிசம்பர் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.99,840 ஆக விற்பனையானது.
சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெள்ளிக்கு, அந்நாடு சமீபத்தில் கட்டுப்பாடுகளை விதித்தது. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின.
தமிழகத்தில் நேற்று (டிசம்பர் 30) ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 420 ரூபாய் குறைந்து, 12,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 3,360 ரூபாய் சரிவடைந்து, 1,00,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 23 ரூபாய் குறைந்து, 258 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 23,000 ரூபாய் சரிவடைந்தது, 2.58 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று காலையில் (டிசம்பர் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
பின்னர் மாலையில் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99, 840 ஆக விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 12,480 ஆக உள்ளது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தங்கம் விற்கும்போது அப்போதைய விலைக்கு ஏன் வியாபாரிகள் வாங்குவதில்லை? வாங்குபவர்களும் கூடுதல் தொகை கேட்பது இல்லை காரணம் புரியவில்லை.
அடுத்தாண்டாவது தங்க விலை குறையணும்... தங்கம் விலை கூட கூடாதுமேலும்
-
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறும்; ஆங்கில புத்தாண்டு உரையில் அதிபர் புடின் நம்பிக்கை
-
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; கோழிகளை கொண்டுவர தடை
-
திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதை தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
-
தமிழகத்தையே குற்றங்களின் கூடாரமாக மாற்றியது தான் திமுகவின் நான்காண்டு கால சாதனையா: நயினார் கேள்வி
-
வாரிசு சான்றிதழுக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம்; வருவாய் ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை
-
ஜாதி, செல்வம், மொழி அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்