அஞ்சல் துறை சார்பில் சேவைகள் வழங்கல்
பொள்ளாச்சி: அஞ்சல்துறை சார்பில், பொள்ளாச்சி போஸ்ட் ஆபீஸில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது.
அனைத்து தரப்பு மக்களும், தற்போது தபால் அலுவலகங்களை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர். அஞ்சல் துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல், மக்களுக்கு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொள்ளாச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினி கூறியதாவது: அஞ்சல் துறையில் ஸ்பீடு போஸ்ட், பார்சல், ஆதார், பாஸ்போர்ட், ஆன்லைன் வங்கி உள்ளிட்ட, 13 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அனைத்து சேவைகளும், பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில், காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரையும், கிணத்துக்கடவு மற்றும் ஏரிப்பாளையம் துணை அஞ்சலகத்தில், ஒரு மணி நேரம் கூடுதல் சேவையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அஞ்சல் துறை சார்பில் வழங்கப்படும், இந்த சேவைகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும்
-
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
-
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
-
குப்பையில் தவறவிட்ட தங்க மோதிரம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்கள்
-
குடிசையில் ஏற்பட்ட தீ அணைத்த தீயணைப்பு வீரர்கள்
-
ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு பயன்
-
மலை ரயில் பாதையில் கரடி கண்காணிக்க கோரிக்கை