தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்போர் முட்டாள்கள்: தர்மேந்திர பிரதான் காட்டம்
மதுரை : ''தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது,'' என மதுரையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்த தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். பிரதமர் வழிகாட்டுதல்படி, கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தான் கல்வி போதிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அதுதான் தேசிய கல்விக் கொள்கை. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
'திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்' என்ற நீதிபதியின் தீர்ப்புக்கு அனுமதி மறுத்து, அரசியல் ரீதியாக, இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரை சந்தித்த பூரணசந்திரன் குடும்பம்
மதுரை வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்தார். பூர்ணசந்திரனின் தந்தையும், சகோதரனும் அமைச்சரிடம், ''பூரணசந்திரன் விருப்பப்படி, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்,'' என கேட்டுக் கொண்டனர். பூரண சந்திரனின் மனைவி இந்துமதி சார்பில் மனுவையும் அமைச்சரிடம் வழங்கினர்.
நிதியை முதல்ல விடுவிங்க
தமிழக பிள்ளைகளுக்கு சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழகத்தில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ., அரசு ஆர்வம் காட்டுகிறது. இதைத்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரையில் தன் கருத்தாக வெளிப்படுத்தி உள்ளார். முதல்ல நிதியை விடுவிச்சுட்டு, மற்றதை பேசுங்க.
கனிமொழி, எம்.பி., - தி.மு.க.,
கனிமொழி தமிழகத்தின் மோசமான மாற்றி மாற்றி பேசும் சுயநலமிக்க அரசியல்வாதி.....உங்க அட்வைஸ் தேவையில்ல...
தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் !!!
இன்னைக்கு டிவி விவாத தலைப்பு என்னங்க ? சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு ? கஞ்சா போதையில் சீரழியும் சிறுவர்கள் ..? இல்லைனா போராடும் ஆசிரியர்கள் ? கண்டுக்காத மாடல் அரசு ? அல்லது குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட பெண்கள் ?? அதெல்லாம் இல்ல .. அதிமுக வை கைப்பற்றுவாரா ஓபிஎஸ் & டிடிவி? அதிமுகவை விழுங்குதிறதா பாஜக ? அதிமுகவை முந்துகிறாரா விஜய் ? கேள்விக் குறியாகும் சீமானின் அரசியல் எதிர்காலம்... வலுப்பெறும் அன்புமணி & ராமதாஸ் மோதல்... இப்படி எதையாச்சும் உருட்டுவாங்க...
எதுக்கு ...அதிலும் கமிஷன் அடிக்கவா ....கமிஷன் .....கலெக்ஷன் ..... கரப்சன் ....இது தானே உங்களது தாரக மந்திரம் ???
அடுத்தவன் தலை மீது தான் விளக்கேற்றுவோம் என்று பிடிவாதம் பிடிப்பவனை தடுக்காமல் இருப்பது தான் மூடத்தனம் !
தடுப்பவர்களுக்கு மக்களே 2026 இல் காரியம் செய்வார்கள் .....
அப்படின்னா உண்மையில் ஒன்னோட பெயர் வேணுகோபால் இல்லையா?
வீணா போன....வேற என்ன சொல்ல
தேர்தல் செலவுக்கு ஆட்டய போடுறதுக்கா.....
மக்கள் இலவசங்களில் ஊறி இருக்கின்றனர்.
Fraudulent group, cannot win the hearts of Tamils by such a kind of acts.
SIR MUTTALA IRUNDHAA OK.
தீப தூணில் தீபம் ஏற்றலாம்.