சோழவந்தானில் துவாதசி வழிபாடு

சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் ஏகாதசி பஜனை, துவாதசி வேதபாராயணம், பிராமண சந்தர்ப்பனை நடந்தது.

இங்கு டிச.30 மாலை 6:30 மணிக்கு ஏகாதசியை முன்னிட்டு பஜனை நடந்தது. தொடர்ந்து டிச.31 காலை 7:15 மணிக்கு குரு வந்தனம், விக்னேஸ்வரர் பூஜை, புண்யாக வாசனம், ஆரோக்கிய லட்சுமி, தன்வந்திரி தியான ஆவாஹன அர்ச்சனைகள், வேத பாராயணங்கள், ஹோமங்கள், மஹாபூர்ணாகுதி, மந்திரபுஷ்பம், சதுர்வேத பாராயணம், நாம சங்கீர்த்தன பஜனைகள், பிராமண சந்தர்ப்பனை நிகழ்ச்சிகள் நடந்தன.

அத்யாபகர் வரதராஜ பண்டிட்ஜி தலைமையில் வேத விற்பன்னர்கள், பாடசாலை வித்யார்த்திகள், பாகவத சிரோன்மணிகள் உலக நன்மை, மக்கள் நோய், நொடியின்றி நலமுடன் வாழ பூஜைகள் நடந்தது.

ஹரிஷ் ஸ்ரீநிவாச ஐயர் உட்பட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement