சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
சூரிச்: சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் விடுதியின் மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலம் கிரான்ஸ்- மோன்டானா. இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது. இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுவிட்சர்லாந்து சுகாதார துறை தெரிவித்தது.
பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.
Flashover எனப்படும் வெடித்துச் சிதறுதல் காரணமாக, முழு அறையுமே தீப்பிடித்து இருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகப்படுகின்றனர். அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தையும் மீட்கப்பட்ட ஆதாரங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், விரைவில் விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆமாம் புறிந்தவன் புத்திசாலி புலும்புபவன் தற்குறி
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு??
சிலிண்டர் வெடிப்பு இருக்காது. அங்கு. சிலிண்டர் கிடையாது. பைப் மூலம் வரும் கேஸ் வரும் அது குளிரை தணிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கு.
தீ பற்றிய போது அடுத்தடுத்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால்...ஒரே மர்மமா இருக்கே...புரிந்தவன் புத்திசாலி.மேலும்
-
ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரரை ஏலத்தில் எடுத்த ஷாருக்கானுக்கு கிளம்பியது எதிர்ப்பு
-
புத்தரின் புனிதப்பொருட்கள் கண்காட்சி; டில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார் மோடி
-
ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்: அண்ணாமலை
-
அமைதியான போராட்டங்களை ஈரான் அடக்கினால் தலையிடுவோம்; அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
-
தேர்தலில் இவிஎம் பயன்படுத்த கர்நாடகாவில் 85% மக்கள் நம்பிக்கை; ராகுலை விளாசிய பாஜ
-
பிரதமர் மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு