அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்; தலைமை செயலகத்தில் இன்று பேச்சு

7

சென்னை: காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ, போட்டோ - ஜியோ' நிர்வாகிகளுடன், அமைச்சர் எ.வ.வேலு, இன்று(ஜன.,2) பேச்சு நடத்த உள்ளார்.


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ; அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான, போட்டோ - ஜியோ சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.


இரண்டு சங்கங்களும், ஜன., 6 முதல், மாநிலம் முழுதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. கடந்த 22ம் தேதி தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர் தலைமையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.



இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், அமைச்சர் எ.வ.வேலு தனது அறையில், இன்று காலை 11:00 மணிக்கு, போட்டோ - ஜியோ நிர்வாகிகள், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆகியோருடன், தனித்தனியே பேச்சு நடத்த உள்ளார்.

Advertisement