சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம்: ''தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன,'' என, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்துாரி குற்றம் சாட்டினார்.
அவர் கூறியதாவது : விடியல் தரப்போகிறார் என ஒருவரை சொன்னார்கள். ஐந்தாண்டுகளாகி விட்டது. விடியல் தான் வரவில்லை. புலம்பெயர் தொழிலாளரை கத்தியால் தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருத்தணியில் ஜமால் என்பவர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழகத்தில் போதை மட்டுமே உள்ளது. திராவிட இயக்கத்தை தொடங்கும் போது பிராமண சமூகத்தை வந்தேறி என்றார்கள். பிறகு வட இந்தியர்களை கூறினர்.
அதன் பின்பு பா.ஜ., தமிழகத்திற்குள் வந்துவிடும் என பூச்சாண்டி காண்பித்தார்கள். தற்போது வடக்கிலிருந்து வயிற்று பிழைப்பிற்காக வருபவர்களை வடக்கன், பீடா வாயன் என அமைச்சர்களே பேசுகிறார்கள். அவன் நம்ம ஆள் இல்லை என்ற விஷத்தை பரப்பி விட்டார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருவதற்கு தற்போது பயப்படுகிறார்கள். தமிழகத்தில் வசிப்பவர்களே நிம்மதியாக வாழ முடியவில்லை.
தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் கிடைக்கின்றன. கேட்டால் இரும்பு கரம் கொண்டு அடக்குகிறோம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது எனக் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ரஜினி, இன்று என்ன சொல்கிறார்.
தமிழகத்தில் ஜீரோ சதவீதம் தான் கஞ்சா உள்ளது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார். ஆனால் உயர்வகை கஞ்சா கிலோ கிலோவாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பிடித்திருக்கிறார்கள். 'யார் அந்த சார்' என்று கேள்விக்கு 'யாருமே இல்லை' என்று சொன்னார்கள். இப்போது 'எங்கே அந்த கஞ்சா' என்று கேட்டால், 'எங்கேயும் இல்லை' என்று தான் சொல்வார்கள் என்றார்.
ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சக்திவேல், பா.ஜ., மாவட்ட தலைவர் சிவலிங்கம் உடனிருந்தனர்.
ஸ்டாலின்தான் வந்தாரு.... விடியல்தான் தந்தாரு ன்னு சொல்லி திமுக ஒட்டுக்கேட்கத் தயாரா ????
மத்திய பிரதேஷ் இண்டூரில் நடப்பது பிஜேபி ஆட்சி .
அங்கே அம்பது வருஷம் ஆட்சி செய்தது காங்கிரஸ் ....
காங்கிரஸ் ஆட்சி நடந்தும் இந்தூரில் அசுத்தமான குடிநீரால் 14 பேர் உயிரிழப்பாம் .....இவர்களுடன் காங்கிரெஸ் கட்சியுடன் விடியல் தேர்தல் கூட்டணி ...
அம்பது வருஷம் காங்கிரஸ் ஆட்சி நடந்தும் ....
போதைபொருள் தாராளம்னு சினிமா நடிகை பேசி நாம கேட்பது பரிதாபம்.
என்ன செய்யறது ??....இங்கே நிலைமை அந்த அளவுக்கு அப்படி கேவலமாக இருக்குது ....
‘இந்தியாவிலேயே மிகவும் தூய்மையான நகரம்’ ஆன இந்தூரில் அசுத்தமான குடிநீரால் 14 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசம் காங்கிரஸ் ஆண்டது 50 வருடங்கள்.. இத்தனை வருடம் 50 வருஷம் காங்கிரஸ் ஆட்சி நடந்தும் அங்கே நிலைமை இவ்வளவு மோசமாகவா இருக்குது?
நேற்று ரயிலில் பயணித்த போது அருகில் இரண்டு நபர்கள் பேசி கொண்டிருந்தர்கள். அரசு அதிகாரிகள் போல் தெரிந்தது . அதில் ஒருவர் கூறியது வியப்பாக இருந்தது. உயர் நிலை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் டாஸ்மாக் உடைய மைக்ரோ ஸ்டோர் -கேள்விப்படாத வார்த்தை கேன்டீன்களில் நிறுவ திட்டம் இருக்கிறது என்பதே எனபதே அது .
எங்க விடியது தெரியும் கஞ்சா போட்டா இதுல விடியல் அரசுன்னு சொல்லிக்கறானுங்க ஒவ்வொருத்தன் தலைலேயும் 5 லட்சம் கடன் எங்க விடியும்
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களுக்கு செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழக குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும் என அன்புமணி சாடல் மேலும்... திமுக அரசு ஒவ்வொரு தமிழக குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை வாங்கி வைத்திருப்பதாகவும் கண்டனம் .....
ஏங்க இவனுங்களுக்கு நம்மள பத்தி என்ன கவலை சார் முதல்வர் அய்யா சிரிக்கும் போது நமக்கு எப்படி வயிறு எரியும்னு அவருக்கு தெரியவைக்கணும்
சார் ...... கடனில் இருந்து தமிழக அரசு மீளவேண்டும் என்றாலும், அது மக்களின் தலையில் சுமையாகத்தான் இறங்கும்.. எந்த அரசியல் கட்சியும் சுமக்காது.. அடுத்து பாஜக-அதிமுக கூட்டணி அரசு அமைந்தாலும் அவர்கள் மக்களுக்கு கசப்பு மருந்தைக் கொடுத்துத்தான் நிதிநிலையை ஓரளவு சரிக்கட்ட முடியும் .... ஆனால் மக்களை வாட்டுகிறார்கள் என்று சொல்லி மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் ..... இன்று இலவசம் என்கிற இன்பம் ஒரு மாயை .... அது நமக்கும், நமது சந்ததிகளுக்குத் துன்பத்தையே தரும் என்று மக்கள் உணரவில்லை ....
கருணா திமுக, மாநில போலீஸ் துறையை ஆளும் கட்சி கீழ் கொண்டுவந்து விட்டது. கருணாநிதி உள்துறை செயலாளராக இருக்கும் போது அரும்பியது. தற்போது மரம். போலீஸ் மட்டும் தேசிய கட்டுபாட்டில் இருக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் பணி மாற்றம் செய்ய வேண்டும். அல்லது சட்ட சபை உறுப்பினர்கள் ஒழுக்க சீலர் என்று தேர்தல் ஆணையம் சான்று வழங்க வேண்டும்.
மிகவும் சரியான கருத்து ....மேலும்
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு