சிவன் கோவில்களில் பிரதோஷம்
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் காலனியில் உள்ள மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், கடகத்துார் சோமேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர், காரிமங்கலம் அபிதகுஜாம்பாள் ஆருண்ணேஸ்வரர், அதியமான்கோட்டை சோமேஷ்வரர் உட்பட மாவட்டத்தில் உள்ள, பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.
மேலும்
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு