கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு

தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவித்து மஹா தீபாராதனை நடந்தது.

அதேபோல், தர்மபுரி எஸ்.வி., சாலையில் உள்ள விநாயகர் கோவில், அபய ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனுறை மல்லிகார்ஜூன சுவாமி கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில், ஓம்சக்தி மாரியம்மன் கோவில், மஹாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், மதிகோண்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், அதியமான்கோட்டை காலபைரவர் கோவில், கெரகோடஅள்ளி அஷ்ட வராகி அம்மன் கோவில், காரிமங்கலம் அருணேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

* அரூர் பழையபேட்டை கரியபெருமாள் கோவில், வர்ணீஸ்வரர் கோவில், அனுகிரக ஆஞ்சநேயர் கோவில், பெருமாள் கோவில், ஐயப்பன் கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம், தீர்த்தகிரீஸ்வரர் கோவில், மொரப்பூர் சென்னகேசவ மற்றும் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில், ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* பாப்பிரெட்டிப்பட்டி வேலவன் குன்று மலை முருகன், விநாயகர் கோவில் கோவிவில் சிறப்பு பூஜை, கதிரிபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் அனுமனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.

புத்தாண்டையொட்டி பொம்மிடி புனித அந்தோணியார் ஆலயம், பி.பள்ளிப்பட்டி புனித கார்மேல் அன்னை ஆலயம், தென்கரை கோட்டை, தர்மபுரி துாய இருதய ஆண்டவர் பேராலயம், சி.எஸ்.ஐ., தேவாலயம், கோவிலுார், அரூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.

Advertisement