பொ.மல்லாபுரத்தில் ஆக்கிரமிப்பு; வாகன போக்குவரத்து பாதிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், தர்மபுரி - சேலம் ரோடு, ஆர்.எம்.ரோடு, ரயில்வே ஸ்டேஷன் முக்கிய கடைவீதிகள் என, 5 முனை இடங்களும் ரயில்வே ஸ்டேஷன் முன்பு சந்திக்கிறது. இப்பகுதியில் நேற்று மதியம், 1:00 மணியளவில் தர்மபுரியில் இருந்து வந்த தனியார் பஸ்சும், எதிரே வந்த லாரியும், ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் திரும்பும் போது உரசிக் கொண்டன. இதனால், 5 திசைகளிலும் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபோன்ற சம்பவம் தினமும் இந்த சந்திப்பில் நடப்பதால், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளில் பைக், கார் உள்ளிட்டவர்களை நிறுத்துவதாலும், சாலையோர கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன், கூடுதலாக கடையை நீட்டித்து சாலையை ஆக்கிரமிப்பதாலும், வாகன போக்குவரத்துக்கு கடும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்து; பலி 47 ஆக அதிகரிப்பு: புலனாய்வாளர்கள் விசாரணை தீவிரம்
-
தமிழகத்தில் பரவலாக மழை; தென்காசி, நீலகிரியில் அதிகம்!
-
தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி உச்சம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
2025 டிசம்பரில் கார் விற்பனை அமோகம்: ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதிய சாதனை
-
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு; 17 பேர் உயிரிழப்பு: 1,000 வீடுகள் சேதம்
-
மா.திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அழைப்பு