'டிஜிட்டல்' மயமாகிறது உர மானிய திட்டம்

புதுடில்லி: நம் நாட்டின் விவசாயிகளுக்கு அளிக்கப்படும், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உர மானியங்களை, 'டிஜிட்டல்' முறையில் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த, 'இ - பில்' தளத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

நம் விவசாயிகள், பயிர்களுக்கான உரங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க, குறைந்த விலையில் உரங்களை மத்திய அரசு அளித்து வருகிறது. இதற்கான உர மானிய தொகை, பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இதற்காக ஆண்டுதோறும் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது.

இதை, டிஜிட்டல் முறையில் செயல்படுத்த, ஒருங்கிணைந்த இ -- பில் தளத்தை மத்திய உரத்துறை அமைச்சர் நட்டா டில்லியில் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகை யில், ''உர மானியங்களை வெளிப்படையான முறையில் செயல்படுத்த அரசுக்கு இத்திட்டம் உதவும். உர மானியங்களுக்கான பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவுவதுடன், தணிக்கைகளையும் எளிதாக்கும். இதுதவிர, முறையாக பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் கண்காணித்து, வலுப்படுத்தவும் இந்த தளம் உதவும்,'' என்றார்.

Advertisement