இணை பிரிந்தால்... உயிர்துறக்கும் புறாக்கள்!
கோவை, துடியலுாரில் தன் வீட்டின் மொட்டை மாடியில், புறாக்களுக்கென தனியறை அமைத்து பராமரிக்கிறார் தம்பி விஜய். 15 ஆண்டுகளுக்கும் மேலாக புறா வளர்க்கும் இவர், நம்மிடம் பகிர்ந்தவை:
என்னிடம், ரோமர் இனத்தில் 200 புறாக்கள் இருக்கின்றன. இவற்றிற்கென வீட்டின் மொட்டைமாடியில், 10x20 அளவுள்ள அறை கட்டியுள்ளேன். உணவு சாப்பிட வெளியே வந்தாலும், பக்கத்து வீட்டில் இருப்போரை தொந்தரவு செய்யாது. எவ்வளவு துாரம் பறந்தாலும், மீண்டும் வீட்டிற்கு வந்துவிடும். என் குரல் கேட்டாலே அறையில் இருந்து பறந்துவந்து தோளில் அமர்ந்து கொள்ளும். என்ன சொன்னாலும் கட்டுப்பட்டு கேட்கும்.
இதன் தனித்துவமே அதிக வேகத்தில், நீண்ட துாரம் பறப்பது தான். மணிக்கு 160 கி.மீ., வேகத்தில், 500 கி.மீ., துாரம் வரை பறக்கும். இலக்கை அடையும் வரை எங்கும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல், கொடுத்த வேலையை முடித்து திரும்பும் திறன் கொண்டது. இதனால் தான், ராஜாக்கள் காலத்தில் துாது செல்ல இப்புறாவைபயன்படுத்தினர்.
ஒடிசா மாநிலத்தில், 1946 ல் இருந்தே, காவல், ரோந்து பணிகள், ராணுவ சேவைப்பணிளுக்கு புறாக்களையும் பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2008 வரை அம்மாநிலத்தில், இச்சேவை நடைமுறையில் இருந்தது. தற்போதும் காவல் புறாக்கள், அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட 15-20 ஆண்டுகள் உயிர்வாழும், ரோமர் இன புறாக்களுக்கு ஒரு தனித்துவ பண்புள்ளது. இவை, ஒவ்வொன்றும் பிரத்யேகமாக தனக்கான இணையை தேடிக் கொள்ளும். பகல் முழுக்க ஆண்புறாவும், இரவில் பெண் புறாவும் அடைகாக்கும். தன் முட்டையில் இருந்து வெளியே வரும் இளம் புறாவுக்கு பறக்க கற்றுத்தரும். இதில், ஒன்று இறந்தாலும், மற்றொன்று ஓரிரு வாரங்களிலே இறந்துவிடும். இத்தனித்துவ குணம், பிற இன புறாக்களுக்கு இருக்காது. என்னிடம் உள்ள புறாக்களை, பணத்திற்கும், இறைச்சிக்கும் விற்பதில்லை. பள்ளி குழந்தைகள் தவிர ஆர்வமுள்ளோருக்கு இலவசமாக தருகிறேன், என்றார்.
பாவம் பக்கத்தில் உள்ளோர்மேலும்
-
டிஜிட்டல் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண்; 14 நாட்களில் பணத்தை மீட்டது சைபர் கிரைம்!
-
வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்
-
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
-
பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை நமக்கான வாய்ப்பு: துணை ஜனாதிபதி
-
வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்; உலக நாடுகளுக்கு போப் அழைப்பு