வெனிசுலா அரசு நிர்வாகத்தை அமெரிக்காவே கவனிக்கும்; அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்து, அவர்களை அமெரிக்கப் படைகள் நாடு கடத்தியது. மதுரோவை சிறைபிடிக்கும் காட்சியை அதிபர் டிரம்ப் நேரலையில் பார்த்ததாக அவர் கூறினார்.
இந்த நிலையில், வெனிசுலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது; வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை வெனிசுலா அரசு நிர்வாகத்தை அமெரிக்காவே கவனிக்கும். வெனிசுலாவில் எண்ணெய் வர்த்தகம் சீரழிந்து விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வெனிசுலாவில் கதவுகள் திறக்கப்படுகின்றன. அங்கு எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்துவோம். இதன்மூலம், வருமானத்தை பெருக்கி, நாட்டை வளமாக்குவோம்.
நிக்கோலஸ் மதுரோ குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ளன. அமெரிக்க ராணுவத்தின் முதல் ஆப்பரேஷன் வெற்றியடைந்து விட்டது. தேவைப்பட்டால், மற்றொரு மிகப்பெரிய தாக்குதலையும் நடத்துவோம். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு மக்கள் பார்த்திடாத தாக்குதலை இன்று பார்த்துள்ளனர். சர்வாதிகாரி மதுரோவை நீதிக்குட்படுத்துவதே இதன் நோக்கம், எனக் கூறினார்.
டிரம்ப் அண்ணன் நாட்டாமை ரொம்ப ஜாஸ்தியா இருக்கே
தெற்கு அமெரிக்க நாடுகள் பிரிந்து கிடப்பதே இதற்க்கு காரணம். அமெரிக்காவின் குள்ளநரித்தனம் மீண்டும் ஆரம்பம்
அமெரிக்கா எல்லை மீறி போய் விட்டது. ராணுவ பலத்தை வைத்து மிரட்டுகிறது. இன்னொரு நாத்தின் இறையாண்மையை காலில் போட்டு மிதிது விட்டது. வியட்நாம் ஆப்கானில் செய்த தவறை மறுபடியும் செய்துள்ளது.
ஒரே போன் மூலம் டிரம்பை மிரட்டி இந்த போரை நிறுத்துவார். அடுத்த ஆண்டு நோபல் பரிசு வாங்குவார்
எலன் மஸ்க்கை மிஞ்சுமளவுக்கு சொத்து வைத்திருக்கும் தீம்க்கா குடும்பமம் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்கள் இன்னும் ஏன் இவர்களுக்கு தெரியவில்லை என்பது மர்மமான புதிர்.
அமெரிக்காவுக்கு எப்பவெலாம் பொருளாதாரம் சீர்கெடுதோ, அப்போ என்னை வளம் இருக்கும் நாடுகளுடன் பிரச்சனை பண்ணி, அங்கு சென்று அந்த நாட்டை சூறையாடுவதுதான் தொழில், இராக், லிபியா, இப்போ வெனின்சுலா.
தரும் வரி வித்திட்டு வியாடியது, அது இந்திய, சீனாவிடம் பலிக்கவில்லை, இப்போ வெனின்சுலாமீது கைவைத்திட்டிருக்கு, கேடுகெட்ட பிழைபிப்பு, பங்களாதேஷில், இலங்கையிலும் கால் ஊண்டியாச்சு,
இனி கண்டிப்பாக ஒரு இந்து சமுத்திர, ஆசிய நாட்டில் அமெரிக்கா சூறையாடும், இந்த லச்சணத்தில் அந்தநாட்டுக்கு போக கோடிகளில் செலவு செய்கிறாங்க நம்மாளுங்க,
வெனிசுலாவில் உள்ள கச்சா எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்கத்தான்.
சிங்கம் அமெரிக்காவுக்கு ரொம்ப தைரியம் தான். அடுத்தது ஈரான் .
இனி வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பார் அமெரிக்கா அழியும் காலம் தொடங்கி விட்டது
வெனிசுலாவில் புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே அந்த நாட்டை நிர்வகிக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எண்ணெய் வளமிக்க இந்நாட்டாய் அமெரிக்காவின் 51 - வது மாகாணமாக
என்றே டிரம்பு அறிவிப்பார்மேலும்
-
சபரிமலை தங்கம் கொள்ளை: வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைது
-
டிஜிட்டல் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண்; 14 நாட்களில் பணத்தை மீட்டது சைபர் கிரைம்!
-
வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்
-
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
-
பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை நமக்கான வாய்ப்பு: துணை ஜனாதிபதி