வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்

11

கோவை: வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: ஒரு திரைப்படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது என்னைப் போன்ற சினிமாக்காரர்களுக்குத்தான் தெரியும். ஆனால், யார் எந்த கருத்துடன் படம் எடுத்தாலும், அது சட்டத்துக்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும்.

மத்திய சென்சார் போர்டு வெளிப்படையாகத்தான் செயல்படுகிறது. நான் நடித்த 'அடங்காதவன்' படம், இன்று வரை வெளியாகவில்லை. அதற்காக, சென்சார் போர்டை குறை சொல்ல முடியுமா?


'ஜனநாயகன்' விவகாரத்தில், சென்சார் போர்டு மீது குற்றம் சொல்ல எதுவும் இல்லை. ஆட்சேபனைக்குரிய காட்சிப் பதிவுகள் இருந்தால், மறு ஆய்வுக்கு உட்படுத்தத்தான் செய்வர். இதற்கு முன்பு, 'தக் லைப்' படத்துக்கும் சிக்கல்கள் இருந்தது.


அதனால், ஜனநாயகன் படத்துக்கான சென்சார் சான்றளிப்பதில் உள்ள பிரச்னையை அரசியலோடு இணைத்து முடிச்சிடக்கூடாது. காங்., இந்த விவகாரத்தில் நுழைவதால், மேலும் சிக்கலாகலாம். வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. பா.ஜ., வெற்றிபெற உழைக்கப் போகிறேன். இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Advertisement