'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது: நுகர்வோர் கோர்ட் போனால் எல்காட் பதில் சொல்ல வேண்டும்
'தமிழக அரசு வழங்கிய, இலவச லேப்டாப்பில் அச்சிடப்பட்டுள்ள, கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் படத்தை நீக்கினால், அதற்கான 'வாரண்டி' கிடைக்காது' என, 'எல்காட்' நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கும் பணியை, கடந்த 5ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். 'லேப்டாப்' மேற்புறத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
இதை விரும்பாத சில மாணவர்கள், அவற்றை அழித்துவிட்டு, தங்களுக்கு பிடித்தவர்களின் படங்களை ஒட்டி, சமூக வலைதளங்களில், பதிவேற்றி வருகின்றனர். இவ்வாறு, லேப்டாப் மேற்புறம் உள்ள படத்தை நீக்கினால், மாணவர்கள் லேப்டாப்பிற்கான 'வாரண்டி' எனப்படும், பழுது நீக்குவதற்கான உத்தரவாதத்தை பெற முடியாது என, எல்காட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட, லேப்டாப்புக்கு ஓராண்டு, 'வாரண்டி' சலுகை உள்ளது. அதை பெற, லேப்டாப் மேற்புறம் உள்ள படம், கட்டாயம் இருக்க வேண்டும். அதில் உள்ள 'சீரியல்' எண் இருந்தால் மட்டுமே, பிரச்னை இல்லாமல் 'சர்வீஸ்' செய்து தர முடியும். இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும், அரசு வழங்கும் வாரண்டியை பெற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
பொதுவாக ஒரு பொருட்களுக்கு உற்பத்தியாளர்களே நேரடியாக அல்லது டீலர்கள் மூலம் வாரண்டி வழங்குவார்கள். ஆனால், தமிழக அரசு வழங்கிய லேப்டாப்களுக்கான வாரண்டி குறித்து, அதனை தயாரித்த எச்பி அல்லது டெல் அல்லது லெனோவா ஆகிய நிறுவனங்கள் தான் கூற வேண்டும். வாரண்டி குறித்து எல்காட் கூற முடியாது. வாரண்டிக்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால், அதற்கு உற்பத்தியாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கும் என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.block_B
- நமது நிருபர் -
சாராயக் கடைக்கு மட்டும் இவர்கள் இருவரது படம் போட மாட்டேன் என்கிறீர்கள். அவர்களது பெயர், படம் இருந்தால் அரசுக்கு இன்னும் மேலும் வரும்படி கிடைக்கும். ஒருவேளை மக்கள் மேலும் நஷ்டப் படக் கூடாது கஷ்டப்படக்கூடாது என்ற நல்லெண்ணம் தான் காரணமோ...
மாணவர்கள் தவறு செய்துவிட்டார்கள்.. படத்தை அழிப்பதற்கு பதில், திருடர்கள் ஜாக்கிரதைன்னு போட்டியிருக்கணும்
என்ன பார் யோகம் வரும்.....இந்த செய்தியை பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது....புரிந்தவன் புத்திசாலி
Recover Entire-Total 90%Unwanted Freebies from RulingParties-Leaders-Cadres. Till then DeRecognise-Sack-Punish them for Subverting/Sabotaging Democracy with VoteBribingFreebies
சரிடா, முதல்வர் ஸ்டாலின் என்று சொல்கிறீர்கள். ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் தந்தை கருணாநிதி படத்தை ஏன் போடணும்? அப்படின்னா இன்பநிதி பெண் நண்பருடன் இருக்கும் படத்தையும் போட வேண்டியதுதானே? அப்படியே இவனுங்க வாரண்டி கொடுத்து அறுத்துத் தள்ளப் போறானுங்க. கல்லூரிப் படிப்பை முடிக்கும் கடைசி வருட மாணவனுக்கு எதுக்குடா லேப்டாப்? அவனுக்குத் தேவை வேலை.
நீங்க இலவசமா கொடுத்ததை எத்தனை பொருளுக்கு நீங்க வாரன்டி கொடுத்து அதை சரிபன்னி கொடுத்தீங்க...
இதுக்கெல்லாம் வாரன்டி இருந்தும் அது உபயோகமற்றதே...
வாரன்டிக்கு எல்காட்டுக்கும் என்ன சம்மந்தம்..
வாரன்டி என்பது பொருள் தயாரித்த கம்பெனிதான் பொறுப்பு...
இது என்னங்கடா புது புரளியா இருக்கு.
விலையில்லா டீ வி, கிரைண்டர், மிக்ஸி இத்யாதிகளாம் சரியா வேலைசெஞ்ஜூதா அந்த மாதிரிதான் இதுவும் அடுத்தவாரம் ரிட்சி ஸ்ட்ரீட்ல சகாய விலைக்கு கிடைக்கும்
தற்காலத்தில் விற்கப்படும் லேப்டாப்/ டெலிவிஷன் எல்லாமே குறைந்த பக்ஷம் மூன்று ஆண்டுகள் வாரன்டியுடன் வருகின்றன தரம் தாழ்ந்த லேப்டாப்புகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கும் தி. மு. க. படுபாவிகள்
இலவசமாக வந்ததுக்கு எதற்கு வாரண்ட்டி? வேலை செய்யவில்லை என்றால் குப்பை தொட்டி இருக்கவே இருக்கிறது
கனிமொழி படம் எங்கே ?மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்