36 லட்சம் கரும்புக்கு வேளாண் துறை பரிந்துரை தேர்ந்தெடுத்து வாங்க கூட்டுறவுத்துறை திட்டம்

இடைப்பாடி: சேலம் மாவட்டத்தில் அரிசி பெறும், 10,87,256 ரேஷன் கார்டு-க-ளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட உள்ளன. இதனால் கரும்பு-களை ரேஷன் கடைகளில் வழங்க, சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டுறவு, வேளாண் துறை அதிகாரிகள் நேற்று, பூலாம்பட்டி தொடக்க வேளாண் கூட்-டுறவு சங்க அலுவலகத்தில், 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசா-யி
களிடம் கருத்து கேட்டனர்.


அப்போது விவசாயிகள், 'கரும்புக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் விலை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள், விவசாய நிலங்களுக்கு சென்று, கரும்பின் தடிமன், தரம், அதன் உயரம் ஆகிய-வற்றை பார்வையிட்டனர்.
இதுகுறித்து சீனிவாசன் கூறுகையில், ''மாவட்டத்தில், 13 வட்-டாரங்களில், 53 வருவாய் கிராமங்களில் ஆய்வு செய்து, தமிழக அரசு நிர்ணயித்த, 6 அடி, அதற்கு மேல் உயரமான கரும்புகள் என, 205 ஏக்கர்களில், 36,18,200 கரும்புகளை கூட்டுறவுத்து-றைக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவர்கள் தேர்ந்தெடுத்து, விவ-சாயிகளிடம் விலைக்கு வாங்கி ரேஷன் கடைகளுக்கு வழங்-குவர்,'' என்றார்.

Advertisement