ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ சான்று வழங்கல்

தேனி: அரசு கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டிற்கு செல்லும் காளைகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப்பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காளைகளை உரிமையாளர், தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

இதுபற்றி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன் கூறியதாவது: மாவட்டத்தில் 53 அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஜல்லிகட்டு காளைகளை பரிசோதித்து சான்றிதழ் வழங்கி வருகிறோம்.

கடந்தாண்டு சான்றிதழ் வாங்கிய காளைகளின் உரிமையாளர்கள் களைகளின் புகைப்படங்கள், தங்களின் ஆதார் நகல் சமர்பிக்க வேண்டும்.

புதிதாக சான்றிதழ் பெறுவோரும் ஆதார் நகலுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Advertisement