உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாநில மாநாடு

தர்மபுரி: தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மே-ளனத்தின், 16-து மாநில மாநாடு, தர்மபுரியில் இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாநாட்டு பேரணியை ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.


இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், காரைக்குடி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்-ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான உள்-ளாட்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்-டனர். அதை தொடர்ந்து, பி.எஸ்.என்.எல்., அலு-வலகம் அருகே, உள்ளாட்சி துாய்மை பணியா-ளர்கள், துாய்மை காவலர்கள், டேங்க் ஆப்ப
ரேட்டர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுக்கூட்டம் நடந்தது.

Advertisement