அரசு பள்ளிகளில் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட அறிவிப்பாணை ரத்து; ஐகோர்ட் உத்தரவு
மதுரை: அரசு பள்ளிகளில் மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. மாணவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா? அவர்களின் பெற்றோர் சிறையில் உள்ளனரா? அவர்கள் அகதிகளா உள்ளிட்ட பின்புல தகவல்களை சேகரிக்குமாறு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.
அரசின் இந்த அறிவிப்பாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமீர் ஆலம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜன 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் அறிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின் போது மாதிரி பள்ளி என்று கூறி ஏன் இந்த தகவல்களை கேட்கிறீர்கள்? இதை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்? என்று நீதிமன்றம் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தவே இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்த தகவல்ககள் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும். மாணவர்களின் தகவல்கள் அனைத்தும் உணர்வு பூர்வமானவை. அரசு பள்ளிகளில் கேட்பது போல், தனியார் பள்ளிகளில் கேட்டுள்ளீர்களா? இப்படி தகவல்களை சேகரிப்பது மாணவர்களுக்கு மனச்சோர்வை உருவாக்கும் என்று கூறி அறிவிப்பாணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடு குட்டிச்சுவர் ஆகக நீதி மன்றங்கள் முதல் காரணம்
அரசு தனியார் பள்ளி மாணவர்கள் ஒழுக்கம் பற்றி தகவல் சேகரிப்பு நல்லது. பிள்ளையின் வளர்ப்பு பெற்றோர் சார்ந்தது. அவர்கள் பின் புலம் அறிதல் அவசியம். குற்றங்களை ஆரம்ப காலத்தில் சீர் திருத்தம் செய்ய முடியும். இது முன்பு போல் குற்ற பரம்பரை சட்டம் அல்ல. தமிழகம் அப்பீல் செய்ய வேண்டும். அல்லது சட்ட மசோதாவாக தாக்கல் செய்ய வேண்டும். திமுகவின் உருப்படியான உத்தரவு. மறைக்க படும் குற்றம் மூலம் தான் மாணவர்கள் மன அழுத்தம் அதிகரிக்கும்.
புள்ளீங்கோ கும்பல் அதிக அளவில் உருவாக கோர்ட் உறுதுணையாக உள்ளது....
புள்ளிங்கோ பயபுள்ளைகள் உருவாவதற்கு நீதிமன்றமே வழி காட்டுகிறது...
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பின்புலத்தை அரசு வெளியிடுமா ????
அரசு ஏதாவது உருப்படியா முயற்சி செய்தால் நீதிமன்றம் தடுக்குது
அரசாங்கமே மதுக்கடைகளைகளை நடத்துவது பற்றி கோர்ட்டுகள் ஒன்னும் சொல்வதில்லை ..மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு