ரூ.4 லட்சம் கோடி ஊழல்; தமிழக அரசு மீது கவர்னரிடம் இபிஎஸ் புகார்
சென்னை: திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்., கவர்னரிடம் புகார் அளித்துள்ளார்.
சென்னை லோக்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்து பேசினார். அப்போது இபிஎஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். திமுக அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குறித்து இபிஎஸ் புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: 2021ம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து பட்டியலை வழங்கியுள்ளோம்; ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க கவர்னரை வலியுறுத்தியுள்ளோம். திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழகத்தை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளி உள்ளது. இதனைப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
ரூ.4 லட்சம் கோடி ஊழல்
மேலும் இபிஎஸ் கூறியதாவது:
உயர் கல்வித்துறையில் 1,500 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாகத்தில் 64,000
கோடி ரூபாய், பத்திரப்பதிவு துறையில் 20 ஆயிரம் கோடி ரூபாய், சென்னை
மாநகராட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய், ஹிந்து சமய அறநிலையத் துறையில்
1,000 கோடி ரூபாய், டாஸ்மாக்கில் 50 ஆயிரம் கோடி ரூபாய், நீர்வளத்துறையில்
17 ஆயிரம் கோடி ரூபாய், எரிசக்தி துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்
நடைபெற்றுள்ளது. மொத்தமாக ஆட்சி பொறுப்புக்கு வந்த 4.5 ஆண்டுகளில் ரூ.4
லட்சம் கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது.
வரவேற்கிறோம்
திமுக
அரசின் ஊழல்களுக்கு முழுமையான ஆதாரம் இருப்பதால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற
நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஊழல்
செய்வதை தவிர திமுக தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை.
@quote@மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தினை வரவேற்கிறோம். காரணம், அது அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். quote
மாணவர்களுக்கு
கடந்த 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் தேர்தலுக்காக தற்போது திமுக அரசு
வழங்குகிறது. பொங்கல் பரிசு தொகையை 3 ஆயிரம் ரூபாய் இருந்து 5 ஆயிரம்
ரூபாயாக உயர்த்த வேண்டும். கிட்னி திருட்டு குறித்து அறிக்கை அளித்தும் ஏன்
நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
திமுக அரசில் நடந்த ஊழல் குறித்து துறை வாரியாக கவர்னரிடம் இபிஎஸ் அளித்த விபரம் பின்வருமாறு:
நல்ல கல்வி குடிநீர் தரமான இலவச மருத்துவமனை போதையற்ற மாநிலம் ஊழலற்ற ஆட்சி நேர்மையான அரசு அறிவுமிக்க ஆசிரியர்கள் அறிவும் அனுபவமும் தன்னலமற்ற தேர்வாணைய அதிகாரிகள் இவை அணைத்தும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் திமுக என்ற கட்சி அழிந்தால் மட்டுமே சாத்தியம்
யோக்கியன் வரான் சொம்புயை எடுத்து உள்ள வை என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
ஒரு இருநூறுக்கு குடும்பத்தை விட்டுட்டு வந்த சிவநாயகம் என்று அவர் குடும்பத்தினார் கூறுகின்றனர்
ரெண்டு திராவிட கட்சிகளும் ஊழலில் திளைப்பவர்கள்தான். என்ன அதிமுக ஊழல் கொஞ்சம் கம்மியா செய்யும், ரவுடிசம் பெருசா இருக்காது , சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கும், பெண்கள் ஓரளவுக்கு நல்ல பாதுகாப்பா இருப்பார்கள் , விலைவாசி பெருசா உயராது , மின் கட்டணம், பஸ் கட்டணம், வீடு வரி , பால் விலை பெருசாக உயராது. மறுபடியும் திமுக வந்தால் மக்களைத்தான் குறைசொல்ல முடியும்.
Yes ADMK clean hand. Both dravidian party...including tvk...vck all must be abolished by people. Who speak against hindus are to be thrown away from india
விசாரணை கமிஷன் அமைத்து - இந்த அரசு வெளியேற்றப்படவேண்டும்
ஆக ஆட்டய போட கடனை வாங்கி குவித்திருக்கிறது இந்த மானங்கெட்ட இந்துமத துரோக இந்துமத விரோத மானங்கெட்ட திராவிட மாடல் அரசு
அதிமுக திமுக கூட்டு களவாணி
தேர்தல் நியாயமான முறையில் நடக்க வேண்டும் என்றால் இந்த ஊழல் அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியில் தேர்தல் நடக்க வேண்டும்... இல்லையென்றால் தேர்தல் காலத்தில் இந்த ஊழல் பெருச்சாளிகளின் பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாது
பாம்பின் கால் பாம்பறியும்மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு