திருந்தாத ஹிந்து விரோத திமுக அரசு துரத்தியடிக்கப்படும்: நயினார் நாகேந்திரன்
சென்னை: திருந்தாத ஹிந்து விரோத திமுக அரசு துரத்தியடிக்கப்படும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தடைவிதிக்கக் கோரும் திமுக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, தீபமேற்ற அனுமதித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்னும் போலி பிம்பத்தைத் தங்கள் சொந்த வசதிக்கு ஏதுவாகப் பயன்படுத்துவது தவறானது எனத் திமுக அரசிற்கு சம்மட்டியடி கொடுத்து, தீபத்தூண் என்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நிலைநாட்டிய நீதிமன்ற அமர்வுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.
தொடர்ந்து பலமுறை நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியும் திருந்தாமல், திரும்பத் திரும்ப ஹிந்து விரோத விஷத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் திருந்தாத ஹிந்து விரோத திமுக அரசு தனது அராஜகக் கொட்டத்தாலேயே கோட்டையிலிருந்து துரத்தியடிக்கப்படும்.
அராஜக திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும். தீபத்தூணில் தீபமேற்றலாம் எனத் தீர்ப்பளித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குட்டு வைத்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் வீணாகக் குட்டிக்கரணம் அடிக்கத் தொடங்கி இருக்கிறது திமுக அரசு.
தீபமேற்றும் தமிழர் பண்பாட்டை முடக்க கங்கணம் கட்டிக் கொண்டுத் திரியும் திமுக அரசு, இன்னும் எத்தனை முறை நீதிமன்றத்தால் குட்டுப்பட்டால் திருந்தும்? எப்போது தான் தனது இந்து மத வெறுப்பைக் கைவிடும்? திரும்பத் திரும்ப விழுந்தும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக பாவலா செய்கிறது திமுக அரசு.
தனது பிரிவினைவாதப் போக்கிற்கு நீதிமன்றத்தில் சவுக்கடி வாங்கியது போதாதென்று, வரும் சட்டசபை தேர்தலில் தமிழக மக்களிடம் சம்மட்டி அடி வாங்கினால் தான் திமுக அரசு அடங்கும் போல! எல்லாம் இன்னும் 70 நாட்கள் தான். எத்தனை மேல்முறையீடு வேண்டுமானாலும் செய்து திமுக அரசு கதறட்டும். தமிழர் பண்பாட்டு விரோத திமுக அரசை வீழ்த்தி தீபத்தூணில் தீபமேற்றுவது 100% உறுதி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (22)
Venugopal S - ,
07 ஜன,2026 - 11:43 Report Abuse
மக்களுக்கு எது தேவையோ அதை கொடுப்பதில் திமுக அரசு மற்ற எந்த மாநிலத்திலும் ஆளும் பாஜகவை விட சிறப்பாகவே செயல்படுகிறது. அதனால் பாஜகவினர் பகல் கனவு காண்பதில் பிரயோஜனம் இல்லை! 0
0
Reply
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
07 ஜன,2026 - 01:50 Report Abuse
அமீத் சாவை சந்திக்காமல் அவமரியாதை செய்தும் பாஜக அதிமுகவை பிடித்து தொங்குகிறது. அதிமுக தவெ கட்சியுடன் கூட்டணி வைத்து களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்டாற்றில் பாஜக கைவிடப்பட்டு 2026 தேர்தல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விடும் என்று தேர்தல் நோக்காளர்கள் கணித்து உள்ளார்கள் . 0
0
Reply
M.Selvam - Chennai/India,இந்தியா
06 ஜன,2026 - 18:59 Report Abuse
போய் வேலையை பாருங்க… 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
06 ஜன,2026 - 18:45 Report Abuse
நாயனம் ஒத்தூத மட்டுமே. ஆலாபனைக்கு அல்ல. . 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
06 ஜன,2026 - 18:06 Report Abuse
நம் தமிழ்க்கடவுள் முருகருக்கு காவடி எடுப்பார்கள். பாவக்கா போகிற போக்கை பார்த்தால் நம் தமிழ்க்கடவுள் முருகரை பாவக்கவுக்கு காவடி தூக்காமல் விடமாட்டார்கள் போல தெரிகிறது. 0
0
vivek - ,
07 ஜன,2026 - 08:13Report Abuse
தன் ஈன புத்தியை காண்பிக்காமல் இருக்க முடியாது 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
06 ஜன,2026 - 17:59 Report Abuse
கடவுளை பகடையாக்கி செயல்படும் பாவக்காவின் கீழ்த்தர மட்டமான அரசியலை என்னவென்பது. போகிற போக்கில் வடக்கில் நடந்துவிட்டது போல நம் தமிழ்நாட்டிலும் நமது கடவுளர்களையே பாவக்காவுக்கு பல்லாக்கு தூக்க வைத்துவிடுவார்கள். 0
0
sankar - Nellai,இந்தியா
06 ஜன,2026 - 19:33Report Abuse
தம்பி இருநூறுக்கு விண்ணப்பிக்கவும் 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
06 ஜன,2026 - 17:52 Report Abuse
திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவது ஒன்றுதான் பாவக்காவின் அஜெண்டா. வேறு வேலையே இல்லையா? சின்னப்பசங்க மிட்டாய்க்கு அழுவது போல இருக்கிறது. 0
0
sankar - Nellai,இந்தியா
06 ஜன,2026 - 19:34Report Abuse
தீபம் ஏற்றக்கூடாது என்பது உங்கள் என்னமா- மிஸ்டர் இருநூறு 0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
06 ஜன,2026 - 17:45 Report Abuse
ஹிந்து விரோத எண்ணம் இல்லாத ராவணன் கும்பகர்ணன் துரியோசனன் துச்சாசனன் அழிந்தான். தான் என்ற மமதையால் அழிந்தனர். தான் என்ற மமதை உள்ள தலை தமிழ்நாட்டை ஆள்கிறது. காலம் கனிந்துவிட்டது 2026 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல். இதுதான் கனிந்த காலம் மமதை மண்ணில் புதையும் காலம் 0
0
Reply
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
06 ஜன,2026 - 16:53 Report Abuse
நல்ல கல்வி குடிநீர் தரமான இலவச மருத்துவமனை போதையற்ற மாநிலம் ஊழலற்ற ஆட்சி நேர்மையான அரசு அறிவுமிக்க ஆசிரியர்கள் அறிவும் அனுபவமும் தன்னலமற்ற தேர்வாணைய அதிகாரிகள் இவை அணைத்தும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்றால் திமுக என்ற கட்சி அழிந்தால் மட்டுமே சாத்தியம் 0
0
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
06 ஜன,2026 - 18:00Report Abuse
மேலே சொன்னது அனைத்தும் பிஜேபி ஆளும் எந்த மாநிலத்திலும் கிடையாது , தமிழ்நாட்டை விட கேவலமா உள்ளது அப்புறம் என்ன திற்கு மாற்றனும் அதைவிட நீ மாறி சென்று விடு சொர்க்கத்திற்க்கு 0
0
sankar - Nellai,இந்தியா
06 ஜன,2026 - 19:35Report Abuse
இதை சொல்லும் திகழ் ஓவியனுக்கு சொர்க்கத்தில் இடமிருக்க வாய்ப்பு இல்லை 0
0
Reply
AaaAaaEee - Telaviv,இந்தியா
06 ஜன,2026 - 16:20 Report Abuse
சாண்டா போண்டா will give பைல்ஸ் பாண்டியன் அப்பா ஸ்டாலிர் time to spend 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement