போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்; 3 ஆண்டுகளில் ஒழிக்க அமித் ஷா கெடு!

24


நமது நிருபர்


போதைப்பொருள் பயங்கரவாதத்தை அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா கெடு விதித்துள்ளார்.

டில்லியில் நடந்த போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையத்தின் 9வது உயர்மட்ட கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப்பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை மத்திய அரசு தொடங்குகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். 2026 மார்ச் 31 முதல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பிரச்னைக்கு எதிராக மூன்று ஆண்டு கால கூட்டுப் பிரசாரத்தைத் தொடங்குவோம்.



போதைப்பொருளுக்கு எதிரான அரசின் போராட்டங்கள் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். போதைப்பொருள் பிரச்னை என்பது வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்னை மட்டுமல்ல, அது ஒரு கடுமையான தேசியப் பிரச்னை. இது நாட்டின் வருங்கால சந்ததியினரைச் சீரழிப்பதற்கான ஒரு சதித்திட்டம்.


இளைஞர்களின் ஆரோக்கியம், அவர்களின் சிந்திக்கும் மற்றும் செயல்படும் திறன் ஆகியவை போதைப்பொருளுக்கு நேரடியாகத் தொடர்புடையவை. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement