அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றுங்கள்: நயினார் வேண்டுகோள்

4

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, “வெற்றிவேல்! வீரவேல்! என மாக்கோலமிட வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழ்ச் சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள்!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்பதை மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பினை உளமார வரவேற்கிறேன்.
தமிழ்ப்பண்பாட்டை ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராகத் தொடர் போராட்டத்தை நடத்தி தமிழர்களாகிய நாம் வெற்றி கண்டுள்ளோம். ஆளும் அரசு ஆயிரம் அடக்குமுறைகளை ஏவினாலும் கொஞ்சம் கூட மனம் துவளாமல் இப்போராட்டத்தை முன்னெடுத்த முருக பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழர்களின் தீபமேற்றும் உரிமையை மீட்டெடுத்ததைக் கொண்டாடும் விதமாக, இன்று(ஜனவரி 6) மாலை 6 மணிக்கு அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து, “வெற்றிவேல்! வீரவேல்! என மாக்கோலமிட வேண்டுமென உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement