உ.பியில் 2,89 கோடி வாக்காளர்கள் நீக்கம்; வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்

11

புதுடில்லி: உத்தரப்பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பின்னர் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பீஹாரைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றன. அதன் பின்னர்,ஒவ்வொரு மாநிலமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று உத்தரப்பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலின் படி, தற்போது அம்மாநிலத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை உத்தரப்பிரதேச மாநில தலைமை தேர்தல் கமிஷனர் நவ்தீப் ரின்வா வெளியிட்டுள்ளார். தற்போது,அங்கு 12.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ்ஐஆர் பணிக்கு முன்னதாக அங்கு 15.44 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.

2.17 கோடி வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 46.23 லட்சம் பேர் இறந்து விட்டதாக நீக்கப்பட்டுள்ளனர். 25.46 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

Advertisement