ரயில் ஒன்' செயலியில் 3 சதவீதம் தள்ளுபடி; தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: 'ரயில் ஒன் செயலி வாயிலாக, முன்பதிவு இல்லாத 'டிக்கெட்' எடுத்தால், 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில் பயணியருக்கான அனைத்து தேவைகளுக்கும், ஒரே செயலியில் தீர்வு அளிக்கும் வகையில், 'ரயில் ஒன்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு டிக்கெட், முன்பதிவு இல்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெறலாம்.
இதற்கிடையே, இந்த செயலி வாயிலாக, முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற, 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
இந்த செயலி வாயிலாக, 'யுபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டு'கள் மற்றும் 'நெட் பேங்கிங்' போன்ற டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் முன்பதிவுகளுக்கு, இந்த தள்ளுபடி பொருந்தும். வரும் 14 முதல் ஜூலை 14ம் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு