துளிகள்
அதானி என்டர்பிரைசஸ் என்.சி.டி.,
'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம், தனது கடன் பத்திரங்கள் வெளியீட்டின் வாயிலாக, வெறும் 45 நிமிடங்களில் 1,000 கோடி ரூபாயை திரட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிறுவன கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 8.90 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்றும் நேற்று துவங்கி, வரும் 19ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விற்பனை துவங்கிய 10 நிமிடங்களிலேயே முதலில் அறிவிக்கப்பட்ட 500 கோடி ரூபாய் இலக்கு முடிந்த நிலையில், மீதமுள்ள தொகையும் 45 நிமிடங்களில் திரட்டப்பட்டது.
எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு ரூ.12,500 கோடிக்கு ஐ.பி.ஓ.,
'எஸ். பி.ஐ., மியூச்சுவல் பண்டு' நிறுவனம், நடப்பாண்டில் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'அமுண்டி' நிறுவனமும் தங்கள் வசம் உள்ள 10 சதவீத பங்குகளை ஐ.பி.ஓ., வாயிலாக விற்பனை செய்து, கிட்டத்தட்ட 12,500 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளன. ஐ.பி.ஓ., வேலைகளை கவனிக்க 9 மெர்ச்சன்ட் வங்கிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே முறை மட்டும் பிரீமியம் எல்.ஐ.சி.,யின் ஜீவன் உத்சவ்
எல். ஐ.சி., நிறுவனம் தனது பிரபலமான 'ஜீவன் உத்சவ்' திட்டத்தில், ஒரே முறை மட்டும் பிரீமியம் செலுத்தும் புதிய வசதியை வரும் ஜனவரி 12, முதல் அறிமுகப்படுத்துகிறது.
பாலிசி எடுக்கும்போது மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது என்றும் பாலிசிதாரருக்கு முழு ஆயுள் காப்பீட்டுடன் வருமானமும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிரீமியம் செலுத்திய பின், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் ஆயுள் முழுதும் அடிப்படை காப்பீட்டு தொகையில் 10 சதவீதம் வருமானமாக கிடைக்கும் என்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களால், இந்த காப்பீட்டின் பலன் பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு