நாட்டின் ஜி.டி.பி.,யை தாங்கி பிடிக்கிறது வீடுகளில் 'மறைந்திருக்கும் மூலதனம்'

2

நீண்டகால சேமிப்பு மற்றும் அதீத விலை உயர்வு காரணமாக, இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கத்தின் சந்தை மதிப்பு, தற்போது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறியீடான ஜி.டி.பி.,யில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை எட்டியுள்ளதாக, 'ஐ.ஐ.எப்.எல்.,கேப்பிடல்' வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.


அதில், மேலும் இடம்பெற்றுள்ள தகவல்கள்:




இந்திய குடும்பங்களிடம் கிட்டத்தட்ட 25,000 டன் தங்கம் கையிருப்பில் உள்ளதாக கணிக்கப்படுகிறது. இது நெருக்கடி நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய அரணாக உருவெடுத்துள்ளது.


உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலில், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்போது, உள்நாட்டில் உள்ள தங்கம் கையிருப்பு, இந்தியாவின் நிதிநிலையை சீராக வைக்கவும், நுகர்வு குறையாமல் பாதுகாக்கவும் உதவும்.


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த அதே வேளையில், 2025ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளது.


வெளிநாட்டு முதலீடுகள் அழுத்தத்தில் இருந்த நேரத்தில், வீடுகளில் இருக்கும் தங்கம் இருப்பு மற்றும் ரிசர்வ் வங்கியின் தங்கம் வாங்குதல் ஆகிய இரண்டும் இணைந்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுத்து, நாட்டின் வெளிநாட்டு வர்த்தக சமநிலையை வலுப்படுத்த உதவின.


வீட்டுகளில் உள்ள தங்கத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே தற்போது அடமானம் வைக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே, தங்கம் சார்ந்த கடன் வழங்கல், வளர்ச்சி அடை ய இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.


பொருளாதார நெருக்கடி நேரத்தில் கைகொடுக்கும் தங்கம், மற்ற காலங்களில் முழுமையான சேமிப்பாகவே பாதுகாக்கப்படுவதால், 'மறைந்திருக்கும் மூலதனமாக' உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


@block_B@

'நிதி சொத்து'


தங்க நகைகள் பாரம்பரிய பயன்பாட்டை தாண்டி, நிதி சார்ந்த சொத்தாக பார்க்கப்படுவதாக 'டெலாய்ட்' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர், நகைகளை பண்டிகை நாட்களுக்காக மட்டுமின்றி, தினசரி பயன்பாட்டிற்கான பொருளாக பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. block_B
Latest Tamil News

Advertisement