திருச்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கு விழா

திருச்சி அரசு கலைக் கல்லூரியில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் க.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 712 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி, ‛மாணவர்கள் மடிக்கணினியை பயனுள்ள வகையில் அறிவு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்' என்று சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் டிஆர்ஓ பாலாஜி, துவாக்குடி நகர் மன்றத் தலைவர் சி.காயாம்பு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் பி.சத்யா வரவேற்றார். மேலும், மாணவர்கள் அறிவு திறனை வளர்ப்பதில் மடிகணினி முக்கிய பங்கு வகிக்கிறது. இம்மடிக்கணினியை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக கல்வி சம்மந்தமான வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். நல்ல பணிக்குச் செல்ல இம்மடிக்கணினி பேருதவியாக இருக்கும் என்று உரையாற்றினார் .

ஆங்கிலத் துறைத் தலைவர் ஆனந்தவல்லி நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் செங்குட்டுவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

Advertisement