பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை
நாமக்கல்: 'தமிழக அரசு, உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு தெரிவித்-துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள, 99 சதவீத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உறுதி-யான, வலுவான கோரிக்கை, உடனடியாக பழைய ஓய்வூதிய திட்-டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதாகும். இல்லாவிட்டால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், 10 சதவீத பங்களிப்பு நிதியை, ஓய்வுபெறும்போது வட்டியுடன் மொத்தமாக வழங்க வேண்டும்.இது, தமிழகம் முழுவதுமுள்ள, 100க்கு, 99 சதவீத ஆசிரியர்-களின், அரசு ஊழியர்களின் முதன்மையான, முக்கியமான கோரிக்-கையாக உள்ளது. இவற்றை, தற்போது வெளிவர இருக்கும், தமி-ழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட அரசாணையில் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், விரைவில் அமல்படுத்தப்பட உள்ள, தமிழக உறுதிய-ளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், இணைய விருப்பம் இல்லாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடைமுறையில் இருந்து வரும், தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், விருப்-பத்தின் அடிப்படையில் தொடர்வதற்கு உரிய வழிவகைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு