அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்-தியும், அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும், நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குஷ்சித்பேகம் தலைமை வகித்தார்.
செயலாளர் அனுராதா கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதிப்படி, அங்-கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது, ஊழியர்களுக்கு பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூ-தியமாக, 9,000 ரூபாய் வழங்க வேண்டும். மே மாத விடுமுறை, ஒரு மாதமாக வழங்க வேண்டும். ஊழியர்கள் பணிகளை சிரம-மின்றி செய்ய ஏதுவாக, புதிய மொபைல் போன் மற்றும் 5ஜி மொபைல் போன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்-ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு