காலி மதுபாட்டில் திரும்ப பெற தனி முகமை ஏற்படுத்த கோரிக்கை

நாமக்கல்:'காலி மதுபாட்டில்களை திரும்ப பெற தனி முகமை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்' என, டாஸ்மாக் மேற்-பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்கள், மாவட்ட மேலாளரிடம் முனு அளித்தனர்.


அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்கள், கடந்த, 2 முதல், காலி பாட்டில்களை திரும்ப பெறவேண்டும் என, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், பணியாளர்களின் குறைபாடுகளை முதலில் நிவர்த்தி செய்துவிட்டு, காலி மதுபாட்டில்களை திரும்ப பெற தனி முகமை ஏற்படுத்த நிர்வாகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும்.மதுபான கடைகளுக்கு, காலிபாட்டில்கள் திரும்ப பெற வழங்-கப்பட்ட, 10 ரூபாய் ஸ்டிக்கர் மற்றும் பதிவேடுகள் திரும்ப டாஸ்மாக் மாவட்ட அலுவலகத்தில், வரும், 13ல், திரும்ப ஒப்ப-டைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான கடைகளில் உள்ள காலி பாட்டில்கள் திரும்பபெறும் திட்டத்தை, தனி முகமை ஏற்ப-டுத்தி செயல்படுத்து வேண்டும்.
பணியாளர்களை பயன்படுத்தக்கூடாது. மதுபான பாட்டில் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதை பணியாளர்கள் மீது தினிக்கக்கூடாது. மாவட்ட மேலாளர், உடனடியாக டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement