அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண நகர வீதிக்கு கலிதா ஜியா பெயர்

நியூயார்க்: அமெரிக்காவில் மிக்சிகன் மாகாண த்திற்கு உட்பட்ட ஹாம்ட்ராம்க் நகரத்தில் உள்ள வீதிக்கு மறைந்த வங்க தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வங்க தேசத்தில் மூன்று முறை பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா உடல் நல குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.

அவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திற்கு உட்பட்ட ஹாம்ட்ராம்க் நகரத்தில் அமைந்துள்ள ஜோசப் கேம்போ மற்றும் கோனால்ட் தெருக்களுக்கு இடையேயான சாலைப் பகுதிக்கு கலிதா ஜியா தெரு என பெயர் மாற்றம் செய்துள்ளதாகவங்க தேச நாளிதழான தேஷ் ரூபன்தோர் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஹாம்ட்ராம்க் நகரம் அமெரிக்காவில் முழுமையாக முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்கள் தொகையை கொண்ட முதல் நகரமாக உள்ளது. கடந்த 2013-ல் முஸ்லிம் பெரும்பான்மை நகரமாக மாறிய இந்நகரம் 2022-ல் அனைத்து முஸ்லிம்களையும் கொண்ட நகர சபையைக் கொண்ட முதல் அமெரிக்க நகரமாக மாறியது.

முன்னதாக, சிகாகோவில் ஒரு சாலைக்கு மறைந்த வங்கதேச ஜனாதிபதியும் கலிதாவின் கணவருமான ஜியாவுர் ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement