தேர்தல் விளம்பரத்துக்காக விவசாயிகளை மோசடி செய்யும் திமுக அரசு: அண்ணாமலை
சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாடுவதே, விவசாயத்தைப் போற்றுவதற்காகத்தான் எனும்போது, தங்களது தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறது திமுக அரசு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக கூட்டுறவு சங்கங்களில், பழைய பயிர்க் கடன் முழுத் தொகையும் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், பயிர்க் கடன் புதுப்பிக்கப்படாததால், கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லாமல், விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை இன்று மன உளைச்சலுக்கு தள்ளியிருக்கிறது திமுக அரசு.
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதே, விவசாயத்தைப் போற்றுவதற்காகத்தான் எனும்போது, தங்களது தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறது திமுக அரசு.
உடனடியாக விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
கழகக் கொத்து அடிமைகளின் கதறல் அருமை .... இனிமை .....
விவசாயிகளை சுட்டுக்கொன்ற ரத்தக்கறை படிந்த கைகளை உடைய தில்லாலங்கடி கழகம் ..... விவசாயிகள் உழைத்து விளைவித்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யாமல் மழையில் நனையவிட்டு விவசாயிகள் வயிற்றில் அடித்த திராவிட மாடல் .... .
அண்ணாமலை , உன்னமாதிரி யோக்கியர் இந்த உலகத்துலயே பாக்கமுடியாதுப்பா.......... ஒரு கமா கூட மாறாதுன்னு சொல்லி,, அப்படியா னு ஜக வாங்குன யோகியர் இந்த அண்ணாமலை,
புலம்புவதற்கு எதுவும் இல்லையே என சும்மா வாயிக்கு வந்ததை புலம்ப வேண்டியது . யாரும் 5 பைசாவுக்கு வகை வைக்க மாட்டார்கள்
3 வேளாண் சட்டத்துல கமா கூட மாறதுன்னான், சட்டமே இல்ல ? என்னடா உங்க மோடி இப்படி பம்முறாரு ?
மோடி ஏமாத்துவது அண்ணாமலைக்கு தெரியாதா ? 3 வேளாண் சட்டம் .... மறந்துட்டியா குமாரு ?
அண்ணாமலை எல்லாம் வெட்டி சிப்பாய் , அவரே ஜெயிக்க வில்லை 130000 வோட்டு வித்தியாசத்தில் , இந்திய முழுமைக்கும் இருந்து ஆள்கொண்டு வந்து பிரச்சாரம் செய்து அமௌன்ட் கொட்டி தோல்வி அடைந்தார் , பாவ யாத்திரை சென்று கட்சி யை வளர்த்தது விட அவருக்கு சொத்து சேர்த்து விட்டார் இனி அவர் எல்லாம் புஸ்ஸ்ஸ வாணம் தான் , ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது கதை தான்
welcome டு KTR இவரை வேண்டும் என்றே துரதியவன் இன்று தெருவில் இருக்கறார்
வசதி உள்ளவன் கூட வெட்கம் மானம் இல்லாமல் இலவச பொருள்கள் ரேஷன் கடையில் வாங்கும்போது நாட்டை ஆளும் அரசு என்ன செய்யும்? ஊழல்தான் செய்யும். மக்கள் எவ்வழியோ அவ்வழியில்தான் நிர்வாகம் இருக்கும். ஆனால் ஏன் வாங்குகிறோம் என்றால் இந்த பணமும் ஊழலுக்கு இரையாகும் என்பதால். . ஆரம்பம் என்றால் முடிவு உண்டு. ரேஷன் மட்டும் ஏன் நிரந்தரமாய் இருக்கிறது என்பது ஏன்?
இவர் விவசாயி என்ற போர்வையில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆரஞ்சு குறியீடு அரசு அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் துவங்க முன்பவர்களை தடுப்பதே