'டவுட்' தனபாலு
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: தி.மு.க., - காங்., கூட்டணி வலுவிழந்துள்ளது. கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி ஆகியோர் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். தி.மு.க.,வோடு இருப்பதா, த.வெ.க., உடன் செல்வதா என காங்., குழப்பத்தில் உள்ளது. 'எங்கள் கூட்டணி இரும்பு கோட்டையாக உள்ளது' என பெருமிதம் கொள்ளும் ஸ்டாலின், தங்கள் கூட்டணி குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது போல, காங்கிரசில் கருத்து சொல்றவங்க எல்லாம் தலைவர்கள் தான்... கேட்டா, 'உட்கட்சி ஜனநாயகம்'னு விதண்டாவாதம் வேற பேசுவாங்க... ஆனாலும், கடைசி நேரத்துல டில்லி மேலிடம் உத்தரவு போட்டுட்டா, எல்லாரும், 'கப்சிப்'னு அமைதியாகிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: நம் உரிமையை மீட்க, ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், புதிய தமிழகம் இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும்; ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவோருடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். நாம் ஒன்றுபட்டு செயல்பட்டால், 15 முதல் 20 தொகுதிகள் வரை தனித்தே வெற்றி பெற முடியும்.
டவுட் தனபாலு: முதல்ல, நீங்க தனித்து போட்டியிட்டு, 15 முதல் 20 தொகுதிகளில் ஜெயித்து காட்டுங்க... உங்க பலத்தை பார்த்துட்டு, 2029 லோக்சபா தேர்தலில் உங்களை கூட்டணியில் சேர்த்துக்க, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், நான், நீன்னு போட்டி போடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: வரும் சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு ஆகியவற்றை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி தலைமையில், இன்று சென்னை, கோயம்பேடில், 'ஜனநாயகன் பொங்கல் விழா' கொண்டாடப்படுகிறது.
டவுட் தனபாலு: அது சரி... பா.ஜ.,வினர் ஒருபக்கம், 'மோடி பொங்கல்' கொண்டாடுறாங்க... தி.மு.க.,வினர், 'திராவிட பொங்கல்'னு கிளம்பியிருக்காங்க... நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் சிந்தனையில் கூட உதிக்காத, 'ஜனநாயகன் பொங்கல் விழா' திருச்சி வேலுசாமி மனசில் தோன்றியிருக்கே... இனி, இவர் இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் அல்ல; த.வெ.க.,தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மோடி பொங்கல் திராவிட பொங்கல் ஜனநாயக பொங்கல் .. இதென்ன கூத்து. மொத்தத்தில் கட்சி சார்ந்த பொங்கல் .. சமத்துவ பொங்கல் போயேபோச்சு.
கிருஷ்ணசாமி இவ்வளவு நம்பிக்கையாகப் பேசும் அவர் கட்சியில் 20/ 15 பேரை விருப்பமானுக் கொடுக்க அழைத்துப் பார்க்கட்டுமேமேலும்
-
புனேயிலிருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் அவதி
-
இந்திய பிரிக்ஸ் தலைமைத்துவ லோகோ, பிரத்யேக இணையதளம் வெளியீடு
-
திமுக அரசுக்கு எல்லையே இல்லையா: ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி
-
உக்ரைன் மீது விடிய, விடிய 300 ட்ரோன்கள் வீசிய ரஷ்யா; மின்சாரம், அவசர சேவைகள் நிறுத்தி வைப்பு
-
ஜனநாயகன் திரைப்பட விவகாரம்: ஜன.,19ல் உச்சநீதிமன்றம் விசாரணை
-
ஜம்முகாஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் வேட்டை; பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை