தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உயர்த்துவேன்: முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

75


திருவள்ளூர்: தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உயர்த்துவேன். இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில், நடைபெற்ற அரசு விழாவில், திராவிட மாடல் ஆட்சியின் “உங்க கனவை சொல்லுங்க” என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இன்று தமிழகத்தின் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள். வரலாற்று சிறப்பு மிக்க நாளாக இது அமைந்துள்ளது. உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் அரசு, உங்கள் கனவுகளை கேட்டு அவற்றை நிறைவேற்றும் நாளாக இந்த நாள் இருக்கிறது.

திராவிட மாடல்



உங்கள் கனவை சொல்லுங்கள், நான் நிறைவேற்றி தருகிறேன். தமிழகத்தின் கஜானாவை சுரண்டிய அதிமுக ஆட்சியை மக்கள் விரட்டியடித்தனர். தமிழகத்தின் உரிமைகள் எல்லாவற்றையும் ஆமாம் சாமி போட்டு அடகு வைத்தவர் இபிஎஸ். ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஒரு இனத்தின் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறோம். ஆட்சி என்பது முதல்வராக எனது கனவு மட்டுமல்ல. ஓட்டளித்த, ஓட்டளிக்காத எல்லோருடைய கனவுகளை நிறைவேற்றுகிற கருவி.


சமூக நீதி




அவ்வாறு கனவுகளை கேட்டு நிறைவேற்றும் போது தான் உங்களது குடும்பம் முன்னேறும். மகிழ்ச்சி அடையும். உங்கள் கனவுகள் நிறைவேறினால் தமிழகம் முன்னேறும், வளர்ச்சி அடையும். வரலாற்றை புரட்டி பாருங்கள், நாம கனவு கண்டால் நிச்சயம், நமது உழைப்பால் அதனை நிறைவேற்றுவோம். சுய மரியாதை, சமத்துவம், பகுத்தறிவு மிக்க சமூகமாக தமிழ் சமூகம் தலை நிமிர வேண்டும். சமூக நீதி நிலைபெற வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்.

வாக்குறுதி



எந்த ஆதிக்கத்துக்கும் தலை குனியாமல் வெல்வோம். மண், மொழி,மானம் காக்க நிமிர்ந்து நிற்கிறோம். நாடே திரும்பி பார்க்கிற நம்பர் 1 மாநிலமாக இருக்கிறோம். இப்பொழுது, நாம் அடுத்த கட்ட கனவை காண வேண்டிய நேரம். உறுதியாக சொல்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். உங்களது கோரிக்கைகளை திட்டங்களாக உருவாக்கி தருவேன். உங்கள் எண்ணங்களுக்கு உருவம் கொடுப்போம். தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக உயர்த்துவேன். இதுவே எனது 2026 தேர்தலுக்கான வாக்குறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



மேடையிலேயே முதல்வர் உறுதி





@block_P@

பட்டா வேண்டும்

60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பொன்னேரியை சேர்ந்த மகளிர் கவிதா கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், ''மாவட்ட கலெக்டருடன் பேசி உடனடியாக பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'', என உறுதி அளித்தார்.block_P


@block_B@

மினி பஸ் வசதி வேண்டும்

திருவள்ளூர் மாவட்டம் கீழ்மேனி கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரியங்கா, தங்கள் பகுதிக்கு மினி பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு விரைவில் மினி பஸ் வசதி செய்து கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.block_B

Advertisement