'சீட்' பெறும் வேட்பாளருக்கு ஒத்துழைப்பு: நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ்., அறிவுரை



ஆத்துார்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில் போட்டி-யிட விரும்புவர்கள், விருப்ப மனு அளிக்க, அக்கட்சி தலைமை தெரிவித்தது.

அதன்படி சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில், அமைப்பு ரீதியாக, 16 மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டி-யிட, விருப்ப மனு அளித்தவர்களிடம், நேற்று நேர்காணல் நடந்-தது.

முதல்கட்டமாக, சேலம் மாநகர், புறநகர் மாவட்டம் என, 11 சட்-டசபை தொகுதிகளுக்கு, நேர்காணல் நடந்தது. அதில் சேலம் புற-நகரில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், 275 பேரிடம் சட்ட-சபை தொகுதி வாரியாக நேர்காணல் நடந்தது.

இதுகுறித்து நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது: தொகுதிக்கு ஒரு வேட்பாளர் தான் தேர்வு செய்ய முடியும். 'சீட்' வாய்ப்பு பெற்றவர்களுக்கு, விருப்ப மனு அளித்தவர்கள் ஒத்து-ழைப்பு வழங்க வேண்டும். 2026ல், விருப்ப மனு அளித்தவர்கள் உள்ளிட்ட கட்சியினருக்கு, உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தல், கட்சி பதவிகளில் நிறைய வாய்ப்புள்ளது. 2026 அ.தி.மு.க.,வின் எதிர்காலமாக உள்ளதால், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பா-ளர்களுக்கு, கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க, பொதுச்செ-யலர் இ.பி.எஸ்., அறிவுறுத்தினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement