சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தில் கோளாறு; பயணிகள் கடும் அவதி
சென்னை: சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. பயணிகள் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 185 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் உடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட தயாரானது. விமானம் புறப்படுவதற்கு முன்பு வழக்கமான சோதனைகளின் போது, இயந்திரத்தில் ஒரு கோளாறு இருப்பதை விமானி கவனித்தார். விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பாகவே அவசரமாக நிறுத்தப்பட்டது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்தனர். கடும் கோபம் அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விமான நிலைய அதிகாரிகள் தலையிட்டு பயணிகளை சமாதானப்படுத்தினர்.
பயணிகள் அனைவருக்கும் ஹோட்டலில் தங்கும் வசதி மற்றும் உணவுகளை விமான நிறுவனம் வழங்கி உள்ளது. விமானத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு இன்று மாலை 5:30 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement