உண்மையான ஜனநாயகன் நான் தான்; சொல்லி வேதனைப்பட்ட சீமான்
சென்னை: 'திரையில் இருக்கும் ஜனநாயகன் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தரையில் இருக்கும் இந்த (சீமான்) ஜனநாயகனை கவலைப்படுவதில்லை,' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது;
ஓட்டுக்கு காசு கொடுப்பவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள். மக்களின் ஓட்டு பற்றி கவலைப்படுபவர்கள் ஒரு பக்கம், மக்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படும் நாங்கள் தனித்து நிற்போம். கூட்டமாக நிற்பதற்கு வீரமும், துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பதற்கு தான் வீரமும், துணிவும் தேவை.
விளம்பர அரசியல்
விளம்பர அரசியல், செய்தி அரசியல் செய்யும் கூட்டம் இருக்கிறது. அண்மையில் கொடுத்த லேப்டாப்பில், கருணாநிதி, ஸ்டாலின் போட்டோக்கள் இருக்கின்றன. அதை பார்க்க சகிக்காமல் மாணவர்கள் அழிப்பதையும் பார்க்கிறோம்.
ஒரு கட்சிக்கான விளம்பரத்தை தேடுவது மாண்பல்ல. இந்த லேப்டாப்பை 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போன வருடமே கொடுத்திருந்தால், அது மக்கள் அரசியல். கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கொடுப்பது தேர்தல் அரசியல்.
பொங்கலுக்கு ரூ.3000 கொடுப்பதை போன ஆண்டே கொடுத்திருந்தால், அது மக்கள் அரசியல். அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இப்போது கொடுப்பது தேர்தல் அரசியலாகத்தான் தெரிகிறது. இந்தப் பொங்கல் மக்களுக்கு தைப்பொங்கல் அல்ல, தேர்தல் பொங்கலத்தான் இருக்கிறது.
இந்தியர், திராவிடர் என்பவர்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள். நாங்கள் தமிழர்கள் என தனித்து நிற்கிறோம். இந்தப் பொங்கல் தமிழ்த் தேசிய பொங்கலாக இருக்கும். தன்மானம் மிக்க தமிழ் மக்கள் திராவிடத்தை பொங்க வையுங்கள் என்று சொல்கிறேன்.
திராவிட தீண்டாமையை துடைத்தெறிய போராடுவதை விட, செத்து ஒழிவதே மேல். நீ (திமுகவினர்) முதலில் தமிழனா? திராவிடனா? தமிழரின் பொங்கல் திருநாளை, எதுக்கு திராவிடப் பொங்கல் என்று அடையாளப்படுத்துகிறாய். திராவிடம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஏன் மரியாதை செலுத்தவில்லை. தேவர் பற்றி இப்போது ஏன் பேசுகிறீர்கள்?
இந்தப் பொங்கலுக்கு ரூ.3000 எதுக்கு? இதனால், ரூ.6,800 கோடி இழக்கிறோம். ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன். இந்த நான்கரை வருடத்தில் மட்டும் ரூ.4.50 லட்சம் கோடி கடன். இந்தத் தொகை இருந்தால், நாட்டை உலகிலேயே தலைசிறந்த நாடாக என்னால் மாற்ற முடியும்.
இப்ப வரைக்கும் சென்னையில் மழை பெய்தால், மழைநீர், குடிநீர் வழிந்தோட இடமில்லை. 60 ஆண்டு ஆட்சி செய்து விட்டார்கள், தலைநகரில் பயணிக்க பாதை இல்லை. மழைநீர் தேங்காமல் ஒன்றும் இல்லை. வெள்ளத்தை தேங்க வைத்து நிவாரணம் கொடுப்பது தேர்தல் அரசியல், வெள்ளமே தேங்காமல் சாலையைப் போட்டு பராமரிப்பது தான் மக்கள் அரசியல்.
ஜனநாயகன்
பராசக்தி தமிழ் படத்தில் தமிழ் வாழ்க என்றும், தெலுங்கு படத்தில் தெலுங்கு வாழ்க என்றும் இடம்பெற்றிருப்பது வியாபாரத்திற்கு தான். வியாபாரி என்ன செய்வான். வரலாறை வரலாறாக பதிவு செய்ய முடியாது.
இலக்கியம், புராணங்கள் பொய் பேசும். வரலாறு பொய் பேசாது, பொய் பேசக் கூடாது. ஆந்திராவில் படம் வெளியாகும் போது, நாங்கள் ஹிந்தியை எதிர்த்தோம் என்று போட முடியாது. பராசக்தியை பான் இண்டியா படமாக்க முடியாது. தமிழகத்தோடு பார்த்துவிட்டு நிறுத்திக்க வேண்டும். இந்தப் படத்தை வட இந்தியாவில் வெளியிட முடியாது.
நான் நடித்த 'அடங்காதே' படத்திலேயே பல காட்சிகள் நீக்கப்பட்டு விட்டன. தனக்கு எதிரான கருத்துக்கள் வரும் போது குரல்வளையை அரசுகள் நசுக்குகின்றன. திரையில் இருக்கும் ஜனநாயகன் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். தரையில் இருக்கும் இந்த (சீமான்) ஜனநாயகனை கவலைப்படுவதில்லை.
படத்துக்கு, பொழுதுபோக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், நர்ஸூகள், போராட்டம் நடத்துவதை பற்றி யாரும் பேசுவதில்லை.
நாங்க நம்பணுமா?
கரூர் சம்பவம் தொடர்பாக யார் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால், ஈரோட்டில் அனுமதித்த நேரத்தை விட 5 நிமிடம் கூடுதலாக பேசிவிட்டேன். என் மீதும், என் தம்பிகள் மீதும் 7 வழக்குகள் போட்டுள்ளீர்கள். உன் ஈவெரா பற்றி பேசினால் தாங்க மாட்டீங்கிற, ஒரே நாளில் 150 வழக்குகள் போட்டுள்ளனர்.
முத்துராமலிங்கத் தேவர் குறித்து பேசும் போது, வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கறீங்க. நிரந்தர முதல்வர் என்று சொன்னவன் எல்லாம் எங்கு படுத்து இருக்காங்க என்று பார்த்துகிட்டு தான் இருக்கிறோம்.
பண்டிகையில் படம் (ஜனநாயகன்) வெளியாகவில்லை அவ்வளவு தானே, அடுத்த 10 நாள் கூடுதலாக ஓடினால் பிள்ளைகள் பார்த்துகிட்டு போகிறார்கள். பள்ளி,கல்லூரிகளில் அரசியல் பேசக் கூடாது என்று சொன்ன நீ, சினிமா பற்றி பேசக்கூடாது என்று ஏன் தடை போடல. இறை வழிபாட்டை விமர்சித்த நீ, திரை வழிபாட்டை ஏன் விமர்சிக்கவில்லை. இதனால், தான் திரையரங்கில் தனக்கான தலைவனை தேடுகிறார்கள்.
ஜனநாயகனுக்கு ஆதரவாக சென்சார் போர்டை விமர்சித்து முதல்வர் நள்ளிரவில் டுவிட் போடுகிறார். மத்திய அரசை நீங்க எதிர்க்கிறீர்களா? நாங்கள் நம்ப வேண்டுமா? ஆப்பரேசன் சிந்தூர் நடந்த போது முதலில் கொடியை தூக்கிட்டு பேரணி போனது யாரு, நீங்க தானே?
துரோகி அல்ல... பகைவன்
மத்தியில் காங்கிரஸ், பாஜ ஆளும் போது, கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இடம்பெற்றிருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி என்று கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் துரோகி கிடையாது, என் இனத்தின் பகைவன். என் நிலத்தின் உரிமைகளை எல்லாம் பறித்தவன். ஹிந்தியை திணித்து, கச்சத்தீவை தாரைவார்த்து, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து நீக்கி, ஸ்டெர்லைட், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திணித்தது காங்கிரஸ். இவ்வாறு அவர் கூறினார்.
இது போன்ற பிரச்சனைகளில் கமலை விட இதில் அதிகம் பாதித்தவர்கள் யாரும் இருக்க முடியாது! அவரது விஸ்வரூபம் திரைப்படம் சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பால் அவரால் படத்தை தமிழ்நாட்டில் திரையிட முடியவில்லை. இன்றைய கமலின் கூட்டாளி ஸ்டாலின் உட்பட அனைவரும் இஸ்லாமியர் ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்படும் என எண்ணி அவருடைய துன்பத்தை வேடிக்கைதான் பார்த்தனர். யாரும் உதவ முன் வரவில்லை. நான் இந்த நாட்டை விட்டே வெளியேறுகிறேன் என மன வருத்தத்தில் அறிவித்தார் கமல். அதன் பிறகுதான் இஸ்லாமிய அமைப்புகளுடன் நடத்தப் பட்ட பேச்சு வார்த்தைக்குப் பின் படத்தில் ஒரு சில வெட்டுக்கள் , வாயசைவுகள் செய்ய கமல் ஒத்துக் கொண்டு பல கட்ட போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீஸ் ஆனது.
எல்லோரும் ஒண்ணு போல, நெற்றியில் விபூதி பூசிக்கிட்டு....... ஏதோ மேக்கப் போட்டு வந்தா மாதிரி தோணுது.......அதெப்படி?
ஐயா சீமான் வேகம் இருக்குமளவுக்கு விவேகம் இல்லை .குண்டூசியை வைத்து மலையை குடைந்து எலியை பிடிப்பேன் என்று கூப்பாடு போடுகிண்றீர்கள்.உங்களுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15000 வாக்குகளே இருக்கின்றது என்பதும் இதைவைத்து 234 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெறுவேன் என்று எப்படி நினைக்கின்றீர்கள் .மாநிலத்தின் முக்கியமான பிரச்சனைகள் ஊழல் ,லஞ்சம் ,வளங்கள் கொள்ளை ,பொது சொத்துக்கள் அபகரிப்பு,சாராயத்தினால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு ,போதைப்பொருள்கள் சரளமாக நடமாட்டம் ,இவைகளை ஒழிக்கும் தீரமான கொள்கைகள் உடையோரிடம் கூட்டு சேர்ந்து சில தொகுதிகளில் வென்று வெளியில் போடும் கூப்பாடுகளை சட்டசபை உள்ளே சென்று போட்டால் சிறிதேனும் பலன்கிடைக்கும் .மக்களுக்கு சிறிதாவது ஆறுதல் கிடைக்கும் ."தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் ." செய்வீர்களா ?
சீமான் கொடுக்கும் பேட்டி அனைத்திலும் நல்லா கவனிச்சுப் பாத்தீங்கன்னா அவர் பின்னால் எப்போதும்
ஹிஜாப் அணிந்த ஒரு முஸ்லீம் பெண் நின்று கொண்டிருப்பார் இதெல்லாம் சைமனின் நாதக கட்சியோட தேர்தல் வியூகமாம்.
ஹி...ஹி...ஹி...அரியலூரில் ஜாதி ஓட்டுக்கள் மிக அதிகம். இந்தாளையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டாங்க. அரியலூரில் இவர் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது.
தேர்தலை பொறுத்த வரை, ஜெயிக்கிறாரோ இல்லையோ இவர்தான் ஜனநாயகம். ஆனால், பதவி மற்றும் அதிகாரம் கொடுக்க முடியாவிடில் தொண்டர்களை நீண்ட காலம் தக்க வைத்து கொள்ள முடியாது - இது எதார்த்தம். 8% வாக்குகளை வைத்து கொண்டு ஒரு சீட் கூட வாங்க முடியாவிடில் நிறையவே கடினம்தான். இவர் பிரதமராக ஆனால் எந்த கட்சியும் தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைத்து கொள்ள முடியாது என்கிற சட்டம் கொண்டு வருவார். ஆனால் முதலில் வரும் தேர்தலிலாவது இவர் MLA ஆக வாழ்த்துக்கள். அரியலூர் தொகுதி இவருக்கு பொருத்தமாக இருக்கலாம். நான் எனக்கு தெரியாது மூன்று நான்கு அரியலூர் தொகுதி மக்களை வெவ்வேறு நாட்களில் சந்தித்த போது அவர்கள் மனநிலை அப்படிதான் இருந்தது.
அதெல்லாம் இருக்கட்டும், செபாஸ்டியன் சைமனாகிய நீங்கள் ஒவ்வொரு தேர்தல்களிலும் கட்டுமர திருட்டு திமுகவிற்கு எதிரான வாக்குகளை உங்களை பின்தொடரும் தற்குறி தும்பிகளை வைத்து சிதறச்செய்து மீண்டும் கட்டுமர திருட்டு திமுக ஆட்சிக்கு வர மறைமுகமாக உதவுகிறாயே, அதை எப்போது நிறுத்தப்போகிறாய்?
அட உலக நாயகன் மாதிரி உளறும் நிலை வந்திருச்சோ ஆமைக்கறி கதை நாயகனுக்கு
அப்ப அந்த விஜயலட்சுமிக்கு என்ன சார் நியாயமான முறையில் செய்தீர்கள்?
வாங்கிய காசுக்காக என்னம்மா கூவுறார் என்ற நகைச்சுவை தான் ஞாபகம் வருகிறது என்று தொண்டர்கள் கூறுகின்றனர்மேலும்
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு
-
நாட்டின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்துள்ளார் பிரதமர் மோடி; முகேஷ் அம்பானி பாராட்டு
-
கலவரத்தை தூண்டும் அமெரிக்கா, இஸ்ரேல்: ஈரான் அதிபர் குற்றச்சாட்டு
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு