மாநில சப் - ஜூனியர் கேரம் சென்னை வீரர்கள் பங்கேற்பு
சென்னை: கன்னியாகுமரியில் நேற்று துவங்கிய மாநில கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த 100க்கும் அதிகமான வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் கன்னியாகுமரி கேரம் சங்கம் சார்பில், இருபாலருக்குமான மாநில சப் - ஜூனியர் கேரம் தர வரிசை சாம்பியன்ஷிப் போட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று துவங்கியது.
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12, 14 மற்றும் ஓபன் பிரிவுகளில் 500க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாவட்ட கேரம் சங்கம் சார்பில் 12 வயதுக்கு உட்பட்ட கேடட் பிரிவில் 16 வீரர், 11 வீராங்கனையர்; 14 வயதுக்கு உட்பட்ட சப் - ஜூனியர் பிரிவில் 16 வீரர், 11 வீராங்கனையர் மற்றும் 14 வயதுக்கு மேற்பட்ட சீனியர் ஓபன் பிரிவில் 32 ஆண், 36 பெண்கள் என மொத்தம் 111 வீரர் - வீராங்கனையர் கலந்துகொண்டுள்ளனர். போட்டி முற்றிலும் தனிப்பிரிவில் நடக்கிறது.
மேலும்
-
கோட்டையைப் பிடிக்கும் திமுக அரசின் கனவு மக்களின் ஓட்டுச்சீட்டினால் சரியும்: நயினார்
-
போன் பயன்படுத்த மாட்டேன்: அஜித்தோவல்
-
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்; இந்திய அணிக்கு 301 ரன் இலக்கு
-
இந்தியாவின் வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களே காரணம்: பிரதமர் மோடி பேச்சு
-
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க போலீசாரை ஏவி அச்சுறுத்தல்; அண்ணாமலை கண்டனம்
-
சென்னையில் இருந்து மும்பை புறப்பட்ட விமானத்தில் கோளாறு; பயணிகள் கடும் அவதி