குடியரசு தின விழாவில் பங்கேற்க தேயிலைத் தோட்ட தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு

2

கூடலூர்: டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, கூடலூர் சேர்ந்த தேயிலை தோட்ட பெண் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்து, அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்.


நீலகிரி மாவட்டம், கூடலூர் சளிவயல் நெல்லிகுன்னு பகுதியை சேர்ந்தவர் இந்திராணி. தேயிலை தோட்டத் தொழிலாளரான இவர், அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் பணியில் இருந்தவரை, தபால் துறை ஊழியர் சந்தித்து, 'குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வந்திருப்பதாக கூறி, அதற்கான அழைப்பிதழை அவரிடம் வழங்கினார்.

இந்திராணி இன்ப அதிர்ச்சியுடன் அழைப்பிதழை பெற்றுக்கொண்டார். இந்திராணி கூறுகையில், 'நான் கூடலூர், சளிவயல் கிராமத்தில் நெல்லிகுண்ணு பகுதியில் வசித்து வரும் ஒரு சாதாரண தேயிலை தோட்ட தின கூலி தொழிலாளி.



எனக்கு ஜனாதிபதியிடம் இருந்து குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் வந்துள்ளது. மிகவும் பின்தங்கிய கடைக்கோடி பகுதியில் வசிக்கும் எனக்கு, ஜனாதிபதியிடம் இருந்து, தபால் மூலம் அழைப்பிதழ் வந்திருப்பது வியப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் உள்ளது' என்றார்.

Advertisement