ஜம்முகாஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் வேட்டை; பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை

ஸ்ரீநகர்; ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

கதுவா மாவட்டத்தில் பில்லவார் பகுயில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் குழுக்களாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு மறைவிடத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை கண்டனர். உடனடியாக அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் சுற்றி வளைக்க, பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர்.

சிறிதுநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, அவர்கள் இருப்பிடத்தை கண்டறியும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement