அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேல்; 7 ஐ.நா., அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

2

ஜெருசலேம்: அமெரிக்காவைத் தொடர்ந்து, இஸ்ரேலும் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அமைப்புகளிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளது.


அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி 31 ஐ.நா., அமைப்புகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், மேற்காசிய நாடான இஸ்ரேலும், ஏழு ஐ.நா., அமைப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.


இந்த அமைப்புகள் தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும், அதிகப்படியான அதிகார வரம்பு மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் செயல்படுவதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

Advertisement