24வது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை: 'சம வேலைக்கு, சம ஊதியம்' கோரி, சென்னையில் 24ம் நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை, தரதரவென இழுத்து சென்று போலீசார் கைது செய்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின், அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் முன்னி லையில், கடந்த 14ம் தேதி பேச்சு நடந்தது. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து, சென்னை கலெக்டர் அலுவ லகம், சைதாப்பேட்டை பன கல் மாளிகை பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.

நேற்று 24வது நாளாக, இடைநிலை ஆசிரியர்கள், சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் அமர்ந்து போராடிய ஆசிரியர்களை, போலீசார் குண்டு கட்டாக வும், வர மறுத்தவர்களை தர தரவென இழுத்து சென் றும் கைது செய்தனர். இவர் கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement