3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
கெய்ரோ: பாரா பாட்மின்டனில் மூன்று தங்கம் கைப்பற்றினார் இந்தியாவின் துளசிமதி.
எகிப்தின் கெய்ரோவில் சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் (எஸ்.யு 5) பிரிவு பைனலில் இந்தியாவின் துளசிமதி முருகேசன் 23, போர்ச்சுகலின் பியாட்ரிசை எதிர்கொண்டார். தமிழகத்தை சேர்ந்த துளசிமதி, 21-8, 21-10 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
* பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் துளசிமதி, மானசி ஜோடி, பைனலில் 21-8, 21-10 என இந்தியாவின் துலிகா, பியாட்ரிஸ் (போர்ச்சுகல்) ஜோடியை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றியது.
* கலப்பு இரட்டையர் பைனலில் இந்தியாவின் துளசிமதி, நிதிஷ் குமார் ஜோடி, 21-15, 21-8 என்ற நேர் செட்டில், இந்தியாவின் ருத்திக், மானசி ஜோடியை சாய்த்து, தங்கம் வென்றது.
* ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் பிரமோத் பஹத், 19-21, 21-15-21-13 என்ற செட் கணக்கில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற சக வீரர் உமேஷ் விக்ரம் குமாரை வென்று, தங்கம் கைப்பற்றினார். ஒட்டுமொத்தம் இந்தியா இத்தொடரில் 8 தங்கம், 9 வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
மேலும்
-
தமிழகத்தில் ஆலை அமைக்கும் உ.பி., நிறுவனம்
-
ரூ.175 கோடி திரட்டியது 'அசெட்பிளஸ்'
-
ஓசூரில் 'சிட்கோ' தொழிற்பேட்டை
-
ரூ.10,300 கோடியில் சென்னையில் உர ஆலை
-
ஜப்பானுக்கு ஆடை ஏற்றுமதி 31 சதவீதம் உயர்வு 7 மாதத்தில் ரூ.1,216 கோடிக்கு வர்த்தகம்
-
முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு உரிய மாநிலமாக உள்ளது தமிழகம் உலக பொருளாதார மன்ற அறிக்கையில் தகவல்