சுருக்கெழுத்து தேர்வு தேதியை மாற்றி அமைக்க கோரிக்கை

சென்னை: 'டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2ஏ முதன்மைத் தேர்வு நடக்கும் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள சுருக்கெழுத்து தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணினி பள்ளி கள் சங்கத் தலைவர் சோமசங்கர், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக, அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக உயர்கல்வித் துறையின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், பிப்., 8ம் தேதி, ஆங்கிலம் அனைத்து நிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநாளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'குரூப் - 2ஏ' முதன்மைத் தேர்வுகள் நடக்க உள்ளன.

'குரூப் --- 2ஏ' முதன்மை தேர்வில் பங்கேற்பவர்களில் பலர், ஆங்கில சுருக்கெழுத்து தேர்வையும் எதிர்கொள்கின்றனர். எனவே, பிப்., 8ம் தேதி நடக்கும் சுருக்கெழுத்து தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்.

அதேபோல், பிப்., 14, 15 ஆகிய தேதிகளில் தட்டெழுத்து தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், பல லட்சம் ஹிந்துக்கள், தங்கள் குடும்பத்தினருடன் வழிபடும் மகா சிவராத்திரி வர உள்ளது. எனவே, தட்டெழுத்து தேர்வு தேதியையும் மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement