தமிழக காங்கிரசில் புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமனம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் 71 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார்.
இந்த பட்டியலில் மத்திய சென்னை கிழக்கிற்கு கராத்தே ஆர்.செல்வம், மத்திய சென்னை மேற்கிற்கு கோபி, வட சென்னை கிழக்கிற்கு மதர்மா கனி, வட சென்னை மேற்கிற்கு தில்லிபாபு உள்ளிட்ட 71 பேர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர்களுக்கான பட்டியல் இந்த அறிவிப்பில் வெளியாகவில்லை.
வாழ்த்துக்கள்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: புதிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு வாழ்த்துகள்.
மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.
காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமையாகும், வாழ்த்துகள். இவ்வாறு பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்