விடைபெற்றது வடகிழக்கு பருவமழை; அடுத்த 7 நாட்களுக்கு வானிலை மையம் அறிக்கை
சென்னை: தமிழகத்தில் 2025ம் ஆண்டு அக்.,16ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகியது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 22ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 23ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அக்டோபர் 16ம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (1)
காத்தப்பன் - ,
19 ஜன,2026 - 17:38 Report Abuse
மீண்டும் அடுத்தாண்டு வருக வருக வடகிழக்கு பருவமழை... 0
0
Reply
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
Advertisement
Advertisement