பாஜ தேசிய தலைவர் ஆனார் நிதின் நபின்

3

புதுடில்லி: பாஜ தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தற்போது செயல் தலைவராக உள்ள நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அவர் பதிய தலைவராகிறார்.


@1brபாஜ தேசிய தலைவராக தற்போது நட்டா இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த விட்ட போதிலும் நீட்டிக்கப்பட்டு இருந்தது. சில தினங்களுக்கு முன்பு, புதிய தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை பாஜ தலைமை வெளியிட்டது.


தேர்தலில் போட்டி இருந்தால் நடத்துவதற்கு, தேர்தல் அதிகாரியாக ராஜ்ய சபா எம்.பி., கே. லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், தற்போது செயல் தலைவராக உள்ள நிதின் நபின், பாஜ புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. தற்போதைய தலைவர் நட்டாவும், தொடக்கத்தில் தேசிய செயல் தலைவராக இருந்து, பின்னர் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான்.

இன்று வேட்புமனு தாக்கல் நடந்தது. நிதின் நபின் பெயரை, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜேபி நட்டா ஆகியோர் இன்று முன்மொழிந்தனர். டில்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட வெவ்வேறு மாநில முதல்வர்களும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

யார் இந்த நிதின் நபின்?



* ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1980 மே 23ல் நிதின் நபின் பிறந்தார். இவர் மறைந்த பாஜ தலைவர் நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார்.



* கடந்த 2006ல் பாட்னாவின் பாங்கிபூர் தொகுதியில் வென்று பீஹார் சட்டசபைக்கு முதல்முறையாக தேர்வானார். 4 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்.


* இவருக்கு பீஹாரின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.


* இவர் ஏற்கனவே பாஜ இளைஞர் அணியின் தேசிய பொதுச்செயலாளர், பீஹார் பாஜ மாநில தலைவர் போன்ற பதவிகளை வகித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement