எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி
சென்னை: கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், மீண்டும் மேடை போட்டு, மக்களை ஏமாற்ற முதல்வர் ஸ்டாலின் கிளம்பிவிட்டார் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
@1brஅவரது அறிக்கை: தமிழகம் முழுவதும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றும் சுமார் 65,000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு, பணிப் பாதுகாப்பும், முறையான ஓய்வூதியமும் வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி 313 ல் கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும், அதற்கான நடவடிக்கை எடுக்காததால், நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வதாக, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள் அறிவித்துள்ளார்கள். இதனால், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று, திமுக கொடுத்த பல நூறு போலி வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. இதனால் பாதிக்கப்பட்டுள்ளது, மாணவர்களின் பசி தீர்க்கும் சத்துணவு ஊழியர்களே. பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றிவிட்டு, வாக்குறுதியை நிறைவேற்றக் கோரும் மக்களின் மீது, கைது நடவடிக்கை என அடக்குமுறையைக் கையாண்டு கொண்டிருக்கிறது திமுக அரசு. ஆனால், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல், மீண்டும் மேடை போட்டு, மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கூட, திமுகவினருக்கு உரைக்கவில்லையா? நீங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தானே அவர்கள் நிறைவேற்றக் கேட்கிறார்கள். முறையான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கூட உங்களுக்கு நேரமில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு, நாளொரு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (30)
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
19 ஜன,2026 - 22:07 Report Abuse
இரு நூறு ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்து பழகிய இந்தியர்களை திருத்துவது அவ்வளவு சுலபமல்ல என்று கூறுவார்கள். அதுபோல 1949 ல் தரித்துக்கொண்ட முகத்தை , அந்த முகத்தை வைத்துக்கொண்டு இது நாள் வரை பல லட்சம் கோடிகளை கட்சியினர் கொள்ளையடித்து பழகிய பின் முகத்தை மாற்று என்றோ எந்த முகம் என்றோ கேட்பது நியாயம்தானா? அதற்கு ஒரே வழி சிரச் சேதம் செய்வதுதான் 0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
19 ஜன,2026 - 21:16 Report Abuse
பிஜேபி + அன்புமணி + தினகரன் + சீமான் + இன்னொரு கட்சி என தனி அணி அமைத்தால் 0
0
Reply
Thravisham - Bangalorw,இந்தியா
19 ஜன,2026 - 20:35 Report Abuse
மானம் சூடு சொரணை எல்லாம் திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு குடும்ப பிரைவேட் கம்பெனி முதல்வருக்கோ அல்லது அப்பாயிஸ ஆட்களுக்கோ கிடையாது 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
19 ஜன,2026 - 20:16 Report Abuse
பாவக்கா மாதிரி தீயக்காவும் மாறிவருகிறது. சொல்லும் பொய்களால் படம் பிரமாதமாக ஓடுகிறது அல்லது ஓட்டப்படுகிறது. 0
0
Reply
பா மாதவன் - chennai,இந்தியா
19 ஜன,2026 - 19:47 Report Abuse
தங்களது கேள்வி நியாயமான கேள்வி. அரசியல்வாதிகள் வாக்குகள் பெறுவதற்கு ஆயிரம் பொய் வாக்குறுதிகள் கொடுப்பார்கள். அதை நம்பினவர்கள் தான் யோசிக்க வேண்டும். வாக்கு செலுத்துவதற்கு முன் எல்லோரும் அவரவர்கள் மூளையை பயன்படுத்த வேண்டும் . தாங்கள் பேசியதில் உண்மை உள்ளதா இல்லையா என்று கூட உணராமல், தவறா சரியா என்று கூட பார்க்காமல், உடனே தவறான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கூட பொய் வாக்குறுதிகள் கொடுப்பவரை நியாயப் படுத்தி அவர்களை மேன்மேலும்
தவறுகள் செய்ய உற்சாகப் படுத்துவது போல் உள்ளது. நியாயங்கள் நிச்சயம் உணரப்பட வேண்டும். செய்யக் கூடியவற்றை தான் சொல்ல வேண்டும். மது கடையை மூடுவது பற்றிய உத்தரவில் தான் முதல்வரின் முதல் கையெழுத்து என்றார்கள். இன்று கேட்டால் கடையை மூடுவதற்கு பதில் வாயை மூடிக் கொள்கிறார்கள். எல்லாம் திராவிஷ மாடல். 0
0
Reply
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
19 ஜன,2026 - 19:37 Report Abuse
கிரிமினல் வழக்குகள் பி ஜே பி எம் பி , எம் எல் எ உள்ளது இவருக்கு தெரியாதா. 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
19 ஜன,2026 - 19:11 Report Abuse
சபாஷ், சரியான கேள்வி. இதற்கு பதில் விதண்டாவாதமாகத் தானிருக்கும். ஊழல் களில் கரை கண்டவர்கல்லவா? 0
0
Reply
sengalipuram - ,இந்தியா
19 ஜன,2026 - 18:49 Report Abuse
ஹிந்தி படிச்சா மோடி பேசுவது புரியும் . கருப்பு பணம் ஒழித்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் Rs 15,000/- கொடுக்கும் அளவுக்கு பணம் திரும்ப கிடைக்கும் என்று தான் கூறினார் . Rs 200 அல்லக்கைகள் இதனை புரிந்து கொள்ள என்னும் பல வருடங்கள் ஆகும். 0
0
kjpkh - ,இந்தியா
19 ஜன,2026 - 19:23Report Abuse
அண்ணாமலை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை வந்துவிட்டார் முட்டுக் கொடுக்க. அசிங்கமாக இல்லை ஹிந்தி பேசுவது புரியவில்லை என்றால் முதல்வர் குடும்பம் திமுகவினர் தனியார் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் போய் ஹிந்தி படித்து கொள்ளுங்கள். கொத்தடிமைகளை கூப்பிட்டு நீங்களும் 15 லட்சம் ரூபாய் வேண்டும் என்றுபோராடுங்கள். 0
0
Priyan Vadanad - Madurai,இந்தியா
19 ஜன,2026 - 20:11Report Abuse
கறுப்புப்பணம்தான் ஒளிந்து விட்டதே. அப்புறம் என்ன? நீங்கள் இந்தியில் கருத்து பதிவிடுங்கள். நான் புரிந்துகொள்வேன். 0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
19 ஜன,2026 - 17:58 Report Abuse
அண்ணாமலை நீங்களும் நதி நீர் இணைப்போம் என்று 14 வருடங்களுக்கு முன் பிரதமர் சொன்னதை திருப்பி கேளுங்கள் 0
0
Barakat Ali - Medan,இந்தியா
19 ஜன,2026 - 20:25Report Abuse
உங்கள் துக்ளக்காரால் முன்மொழியப்பட்ட பிரதம மந்திரி வேட்பாளரான ராகுல் அதை பயனற்ற திட்டம் ன்னு சொல்லிட்டாரே .... தெரியாதுங்களா ???? இதுக்குத்தான் பொது அறிவு வேணும்ன்னு சொல்றது .... 0
0
Barakat Ali - Medan,இந்தியா
19 ஜன,2026 - 20:43Report Abuse
நதிநீர் இணைப்பே காவிரிப் பிரச்னையை முன்னிட்டு பேசப்பட்டது .... கர்நாடகா விடும் மிகை நீரை - கர்நாடகாவின் குற்றச்சாட்டும் அதுதான் - உருப்படியாகப் பயன்டுத்த திமுக என்ன செய்தது ???? 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
19 ஜன,2026 - 17:58 Report Abuse
அரக்குறிச்சி 26000 வோட்டு வித்தியசாம் தோல்வி , கோவை 130000 வோட்டு வித்தியாசம் தோல்வி , தலைவர் பதவி இறக்கியாச்சு , இப்ப நீ எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்அதே தான் நாங்கள் கேட்கிரோம் 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
19 ஜன,2026 - 19:20Report Abuse
அண்ணாமலை பேசுறது அப்பப்ப பேப்பர்ல நியூஸ் வருது. அதைப் பாத்துட்டு தானே பினாத்துற. நீயும் அதையே கேக்குறேன்னு வெட்கமில்லாமல் சொல்றியே. 0
0
சந்திரன் - ,
19 ஜன,2026 - 20:02Report Abuse
தோல்விக்கு அவர் காரணமல்ல உன்னைபோன்ற சிந்திக்க திறன் இல்லாத மக்களே 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
19 ஜன,2026 - 20:31Report Abuse
திருட்டு த்ரவிஷ ஊழல்மிகு முதல் குடும்ப கம்பெனிக்கு ஓர் 200க்கு முட்டு கொடுத்து முட்டு கொடுத்து வாழும் நீயெல்லாம் பூமிக்கு பாரம் 0
0
Reply
மேலும் 13 கருத்துக்கள்...
மேலும்
-
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை: 'தெரியாது' என்றே சமாளித்த விஜய்
-
தகவல் சுரங்கம்:பென்குயின் பாதுகாப்பு தினம்
-
கூட்டணியில் காங்கிரசை தக்க வைக்க முயற்சி! ராகுலை சந்திக்கிறார் கனிமொழி
-
அறிவியல் ஆயிரம்:உலகின் பெரிய பாம்பு
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
Advertisement
Advertisement